Top
undefined
Begin typing your search above and press return to search.

முழு அடைப்பால் ஸ்தம்பித்தது கேரளம் : ஐயப்ப பக்தர்கள் மீது வன்முறை வெறியாட்டம்

முழு அடைப்பால் ஸ்தம்பித்தது கேரளம் : ஐயப்ப பக்தர்கள் மீது வன்முறை வெறியாட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Jan 2019 7:45 AM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு இரண்டு கம்யூனிஸ்ட் பெண்கள், கேரள பினராயி அரசின் காவல்துறை பாதுகாப்புடன் ரகசியமாக அதிகாலை 3.40 மணிக்கு சென்றனர். இதை கண்டித்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் ஐயப்ப பக்தர்களும் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய முழு அடைப்பை கடைபிடித்து வருகின்றனர். பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும், இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஆங்காங்கே தென்படுகின்றன. மற்றபடி முழு அடைப்பு மாநிலம் முழுவதும் காணப்படுகிறது.
https://twitter.com/NewIndianXpress/status/1080725201074049024?s=19
கேரள மாநிலம் திரிச்சூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
https://twitter.com/TimesNow/status/1080726927583760384?s=19
கேரள காங்கிரஸ் எம்.பி சுரேஷ், ஆளும் பினராயி அரசை கடுமையாக சாடியுள்ளார். ஐயப்ப பக்தர்களின் மத உணர்வு மீது பினராயி அரசு தாக்குதல் நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1080713156157104129?s=19
முன்னதாக நேற்று, சபரிமலை பந்தளத்தில் பா.ஜக. நடத்திய போராட்டத்தில் மார்க்சிஸ்டுகள் புகுந்து ரகளை செய்தனர். பா.ஜ.க வினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஐயப்ப பக்தரும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் (55) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  இது தொடர்பாக 2 மார்க்சிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆளும் ஹிந்து விரோத கேரள அரசுக்கு எதிராக போராட்டம் வலுபெற்று வருகிறது.
https://twitter.com/indsamachar/status/1080712142108516353?s=19
Next Story