Top
undefined
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் : இரண்டு கம்யூனிஸ்டுகள் கைது

கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் : இரண்டு கம்யூனிஸ்டுகள் கைது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Jan 2019 7:02 AM GMT

கேரள மாநிலம் பந்தளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் உள்பட ஐயப்ப பக்தர்களும் ஹிந்து இயக்கித்தினரும் நடத்திய போராட்டம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ச்சியாக கற்களை வீசிய சம்பவத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் கொல்லப்பட்டார். இவர் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர். இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டதுடன், நாடு முழுவதும் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கோயிலில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,  சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது எனவும் ஐதீக நடைமுறைகளைக் காட்டி கோவில் நிர்வாகம் கூறிவருகிறது.. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள்
கோவில் நிர்வாகத்துக்காகவும், ஐயப்ப பக்தர்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் அங்குள்ள பினராயி தலைமையிலான மார்க்சிஸ்டு அரசு ஹிந்துக்கள் வாக்குகளை பிரிக்கவும், அங்குள்ள மைனாரிட்டி மக்களின் வாக்குகளைப் பெற அவர்களை சந்தோஷப்படுத்தவும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் கோவிலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


இதனிடையே, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து (45), கனகதுர்கா (42) ஆகியோர் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய கடந்த மாதம் 24 ஆம் தேதி வந்தனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இருவரும் திரும்பிச் சென்றனர்.  இந்த நிலையில் மீண்டும் சபரிமலை வந்த இருவரையும் போலீஸார் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் புதன்கிழமை அதிகாலையில் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.


இச்சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை பந்தளத்தில் பா.ஜக. நடத்திய போராட்டத்தில் மார்க்சிஸ்டுகள் புகுந்து ரகளை செய்தனர். பா.ஜ.க வினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஐயப்ப பக்தரும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் (55) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  இது தொடர்பாக 2 மார்க்சிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


https://twitter.com/bijugovind/status/1080683555997417472?s=19

கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட இந்த அராஜக கொலையை அடுத்து கேரளாவில் மேலும் பதற்றம் அதிகமாகியுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Next Story