Top
undefined
Begin typing your search above and press return to search.

மேலும் பல மருந்துப் பொருட்களின் விலையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மோடி சர்க்காரின் ஜன் அவுஷாதி யோஜனா திட்டம் மறுசீரமைப்பு!

மேலும் பல மருந்துப் பொருட்களின் விலையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மோடி சர்க்காரின் ஜன் அவுஷாதி யோஜனா திட்டம் மறுசீரமைப்பு!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Jan 2019 2:31 AM GMT

ஜன் அவுஷாதி யோஜனா திட்டத் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஜன் அவுஷாதி யோஜனா திட்டத்திற்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் வண்ணம் செயல்பட தொடங்கி உள்ளது. சென்ற ஆண்டு உலகின் மிக பெரிய சுகாதார காப்பிட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பது இதன் ஒரு அங்கமாகும்.


ஜன் அவுஷாதி யோஜனாவில் பொதுவான மருந்து பொருட்கள் மற்றும் கருத்தரிப்பு சோதனைக் கருவி, குழந்தைகள் மற்றும் பெண்களின் டயபர்கள், நிக்கோட்டின் மாற்று மாத்திரைகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்கள் ஜன் அவுஷாதி மையங்களில் வெளிசந்தையை விட 50 சதவிகிதம் குறைந்த விலையில் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் ஜன் அவுஷாதி மையங்கள் மூலம் அரசின் கருத்தரிப்பு சோதனைக் கருவி "அன்குர்" 20 ரூபாய்க்கு கிடைக்கும்.


இதை போல பல மருந்துப் பொருட்களின் விலையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். மத்திய அரசு 4600 ஜன் அவுஷாதி மையங்களை அமைத்திருக்கிறது. இதன் முலம் ஜன் அவுஷாதி மையங்கள் நல்ல தரமான மருந்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜன் அவுஷாதி திட்டத்திற்கு முன்னுரிமை தரவுள்ளது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் "ஜன் அவுஷாதி தினம்" கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


Inputs - NDTV, NewGen

Next Story