Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிய பெண்களை வைத்து ஒப்பேற்றப்பட்ட "வனிதா மதில்" : பினராயி அரசின் ஹிந்து விரோத போக்கை தோலுரித்து காட்டிய இணைய வாசிகள்

இஸ்லாமிய பெண்களை வைத்து ஒப்பேற்றப்பட்ட வனிதா மதில் : பினராயி அரசின் ஹிந்து விரோத போக்கை தோலுரித்து காட்டிய இணைய வாசிகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Jan 2019 6:44 PM GMT

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து லட்சக்கணக்கான ஹிந்துக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.  சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையாக போராடினார்கள்.
இதற்காக கேரளாவில் மூன்றுக்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தினார்கள். கடந்த டிசம்பர் 26-ம் தேதி, ஐயப்ப ஜோதி என்ற விழாவை நடத்தி சாதனை புரிந்தார்கள்.  இந்த போராட்டங்களுக்கு, ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட்  அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் ''பெண்களின் மதில் சுவர்'' போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாலை மூன்று மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு "வனிதா மதில்" என்று பெயர் வைக்கப்பட்டது.


ஹிந்து விரோத கேரள முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடந்த இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.  மகளிர் சுவர் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத்தும் பங்கேற்றார்.


ஆனால், ஹிந்து விரோத கேரள கம்முனிஸ்டுகள் நடத்திய இந்த போராட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு விருப்பம் இல்லாததால் மாற்று மதத்தினர் இந்த போராட்டங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.
குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து கொண்டு ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்டுகள் நடத்திய மனித சங்கிலி போராட்டங்களில் பங்கு பெற்றது, அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
https://twitter.com/ShobhaBJP/status/1080143643896238086?s=19
https://twitter.com/Hariindic/status/1080325809099788288?s=19
https://twitter.com/SPEAKTRUTH108/status/1080084427718311937?s=19
https://twitter.com/HinduDndEqlity/status/1080361608201863170?s=19
https://twitter.com/advocaterakesh9/status/1080455052702081027?s=19
https://twitter.com/RituRathaur/status/1080298982310641664?s=19
கீழே பதியப்பட்டுள்ள கீச்சுகளில் காணொளி ஒன்று பதியப்பட்டுள்ளது. அந்த காணொளியில், பத்திரிக்கையாளர், ஒரு இஸ்லாமிய பெண்ணிடம், எதற்காக இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளீர்கள் என்று கேட்டதற்கு, "எதற்கு என்று தெரியாது. என் கணவர் கூறினார், வந்தேன்", என்று கூறியதாக ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/surnell/status/1080188148544606209?s=19
https://twitter.com/DrGPradhan/status/1080382547027206144?s=19
https://twitter.com/KrrisshYadhu/status/1080308815139098624?s=19
தொடர்ந்து, கேரள பினராயி அரசின் ஹிந்து விரோத போக்கை இணையதள வாசிகள் தோலுரித்து காட்டி வருகின்றனர்.
Next Story