Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐயப்ப பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார் என பச்சை பொய் உரைத்த கேரள முதல்வர் பினராயி : பிரேத பரிசோதனையில் கொலை குற்றம் அம்பலம்

ஐயப்ப பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார் என பச்சை பொய் உரைத்த கேரள முதல்வர் பினராயி : பிரேத பரிசோதனையில் கொலை குற்றம் அம்பலம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Jan 2019 2:00 PM GMT

கேரள மாநிலம் பந்தளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் உள்பட ஐயப்ப பக்தர்களும் ஹிந்து இயக்கித்தினரும் நடத்திய போராட்டம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ச்சியாக கற்களை வீசிய சம்பவத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் கொல்லப்பட்டார். இவர் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர். இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டதுடன், நாடு முழுவதும் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை பந்தளத்தில் பா.ஜக. நடத்திய போராட்டத்தில் மார்க்சிஸ்டுகள் புகுந்து ரகளை செய்தனர். பா.ஜ.க வினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஐயப்ப பக்தரும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் (55) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்
.  இது தொடர்பாக 2 மார்க்சிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை குற்றம் புரிந்த கம்யூனிஸ்டுகளை காக்கும் வகையில், சந்திரன் உன்னிதன் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என்று கேரள கம்யூனிஸ்ட் முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்தார். பிரேத பரிசோதனை நடப்பதற்கு முன்பே கேரள முதல்வர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் உரைத்தது பச்சை பொய் என்று தற்போது தெரிய வந்துள்ளது. சந்திரன் உன்னிதனின் பிரேத பரிசோதனையில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மண்டைஓட்டின் முன்பக்கத்திலும் நடுபக்கத்திலும் கடும் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனை வரும் முன்பே கேரள முதல்வர் முந்தி அடித்துக்கொண்டு பொய் உரைத்தது ஏன் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
https://twitter.com/keveeyes/status/1080796860606902272?s=19
https://twitter.com/Satyanewshi/status/1080812832759865350?s=19
Next Story