Top
undefined
Begin typing your search above and press return to search.

அவினாசி - அத்திகடவு திட்டம் விரைவில் தொடக்கம் - ஆளுநர் உரையில் வெளியான அசத்தல் திட்டங்கள்

அவினாசி - அத்திகடவு திட்டம் விரைவில் தொடக்கம் - ஆளுநர் உரையில் வெளியான அசத்தல் திட்டங்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Jan 2019 6:43 PM GMT

பவானி ஆற்றின் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 74 ஏரிகள், 971 குளங்களில் நிரப்பி 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கப்பதோடு, நிலத்தடி நீரை செறிவூட்டி குடிநீர் வழங்கலை செம்மைபடுத்தப்படும் அவினாசி-அத்திகடவு திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.


தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தை  தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், 2ஆண்டுக்கு ஒரு முறை மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மூலம் உலகத் தமிழ் அமைப்புகளின் மாநாடு நடத்தப்படும் என்றார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டுவதோடு, பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங் வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


வறுமை ஒழிப்பின் முன்னோடித் திட்டமான புதுவாழ்வுத் திட்டம், தமிழகத்தில் எஞ்சியுள்ள 265 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட ஆளுநர், ஜெர்மன் வங்கி உதவியுடன் போக்குவரத்து கழகங் களை மறுசீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. பழைய பேருந்துகளுக்கு பதிலாக எரிபொருள் செயல்திறன் மிக்க பிஎஸ்-6 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் என்றார்.
மாநிலத்தின் சராசரி எழுத்தறிவு நிலையைக் காட்டிலும் பழங்குடியினர் எழுத்தறிவு நிலை குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளது. எனவே, பழங்குடியினர் வாழும் உட்புற பகுதிகளில் பள்ளிகளைத் துவக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது என்று குறிப்பிட்டார்.
வாகன உற்பத்தி துறையில், அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் தயாரிப் பதை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளுடன் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு தளவாடங்களையும், வானூர்தி சாதனங்களையும் தயாரிப்பதை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதேபோன்று ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் தொடக்கத் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் புதிய கொள்கை ஒன்றை அரசு விரைவில் வெளியிடும் என்றும் ஆளுநர் தமது உரையில் தெரிவித்தார்.
Next Story