Top
undefined
Begin typing your search above and press return to search.

முஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ஹிந்து மதத்தினரை மட்டும் குறிவைப்பது ஏன்? : சபரிமலை குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாதவன் நாயர் காட்டம்

முஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ஹிந்து மதத்தினரை மட்டும் குறிவைப்பது ஏன்? : சபரிமலை குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாதவன் நாயர் காட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Jan 2019 10:59 AM GMT

சபரிமலையில், நள்ளிரவில் பெண்கள் வழிபாடு என்ற பெயரில் ஊடுருவ வைக்கப்பட்ட செயல், கேரள அரசின் கோழைத்தனமான நடவடிக்கை எனவும்,  சீக்கிய, முஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ஹிந்து மதத்தினரை மட்டும் குறிவைப்பது ஏன்? என்றும் இதில் அரசியல் சதி உள்ளதாகவும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயர் கூறியுள்ளார்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில், சமீபத்தில், பிந்து, கனகதுர்கா என்ற இரு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் பெண்கள் போலீசார் துணையுடன் கோவிலுக்குள் ஊடுருவினர். 'சபரிமலையில், 10 - 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசிக்கக் கூடாது' என, பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஐதீகத்திற்கு, இதன் மூலம் களங்கம் ஏற்பட்டதால், பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயர் கூறியதாவது: கடந்த ஆண்டு, கடுமையான வெள்ளத்தினால் கேரளாவில் கடும் பேரழிவை சந்தித்தது. இதனால், மாநிலத்தில், மறுசீரமைப்பு பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசு தேவையில்லாமல் சபரிமலை விவகாரத்தில் தனது சக்தியையும், ஆற்றலையும், செலுத்தி அதனை வீணடித்து வருகிறது. மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகிறது.


சபரிமலையில் நள்ளிரவில் பெண்கள் வழிபாடு நடத்த வைத்தது கோழைத்தனமான நடவடிக்கை. இந்த நிகழ்வு அரசு ஆதரவுடன் நடந்துள்ளது. இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அனைத்து நடவடிக்கைகளும் நள்ளிரவில் நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பிறகு ஏற்பட்ட அமைதியான சூழ்நிலையை மாநில அரசு கெடுத்துள்ளது.


குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பது மக்கள் மற்றும் பக்தர்கள் பின்பற்றும் நடைமுறை மற்றும் பாரம்பரியம். இதனை அனைவரும் மதிக்க வேண்டும். இதில், எந்த அரசியல்சாசனமும் ஈடுபடுவதாக தெரியவில்லை. சீக்கிய, முஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் அரசோகுறிவைப்பது ஏன்? இதில் அரசியல் சதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றது.

Next Story