Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் அரசால் திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் - மத்திய பிரதேசத்தில் விபரீத நடவடிக்கை

காங்கிரஸ் அரசால் திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் - மத்திய பிரதேசத்தில் விபரீத நடவடிக்கை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Jan 2019 12:09 PM GMT

நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 2,600 பேருக்கு வழங்கப்பட்டுவந்த பென்சனை மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது மத்தியப் பிரதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 2 ஆயிரத்து 604 பேருக்கு, மாதந்தோறும் தலா ₹25,000 2008ஆம் ஆண்டு முதல் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் இருந்த பா.ஜ.க அரசு பென்சனாக வழங்கி வந்தது.



மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த பென்சன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொய்யான பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து நீக்கி, முறைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலகட்டத்தில் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்திக்கு நெருக்கமானவராக இருந்தவர் கமல்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story