Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரசாரின் அவதூறு பிரச்சாரத்தை தூள் தூளாய் உடைத்து பொடியாக்கினார் நிர்மலா சீதாராமன் : பிரதமர் மோடி, அமீத்ஷா, அருண் ஜெட்லி புகழாரம்

காங்கிரசாரின் அவதூறு பிரச்சாரத்தை தூள் தூளாய் உடைத்து பொடியாக்கினார் நிர்மலா சீதாராமன் : பிரதமர் மோடி, அமீத்ஷா, அருண் ஜெட்லி புகழாரம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Jan 2019 11:58 AM GMT

ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக காங்., தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக லோக்சபாவில் நேற்றுடன் 3 வது நாளாக காரசார விவாதம் நடந்தது அப்போது ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காங்கிரசாரின் கேள்விகளுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தார்.



ரபேல் விவகாரத்தில் ஏற்கனவே கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு தனது பாணியில் அதிரடி பதில்களை தந்த ராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையில் பல்வேறு கேள்விகளை கேட்டபோது பதில் சொல்லத் தெரியாமல் காங்கிரசார் விழித்தனர். ராகுல் காந்தியும் நிர்மலா சீத்தாரானின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனார். நிர்மலா சீத்தாராமனின் அசத்தலான இந்த பேச்சு மற்றும் விளக்கவுரைகளுக்கு பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் கட்சி தலைவர் அமீத்ஷா ஆகியோர் டுவிட்டரில் நிர்மலா சீத்தாராமனின் நாடாளுமன்ற உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி தனது டுவிட்டரில் “ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் வெளிக் கொண்டுவந்து காங்கிரசாரின் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகள் மற்றும் அவதூறு பிரச்சாரத்தை தூள் தூளாய் உடைத்து பொடியாக்கினார் இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். நேற்றைய அவருடைய நாடாளுமன்ற பேச்சை அனைவரும் கவனிக்க வேண்டும் என புகழ்ந்துரைத்துள்ளார்.


அதே போல பா.ஜ.க தேசிய தலைவர் அமீத்ஷாவும் தனது டுவிட்டர் செய்தியில் “பொய்யை சிலகாலம் தான் பேச முடியும். நீண்ட நாளைக்கு அது பயன்படாது என்பதை காங்கிரசாருக்கு நிர்மலா சீத்தாராமன்ஜி புரிய வைத்துள்ளார். காங்கிரசாரின் பொய் பிரச்சாரத்தை தனது உண்மைகள் அடங்கிய பேச்சுக்கள் மூலம் தவிடு பொடியாக்கியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ்காரர்களின் பொய்யான முக மூடியை அவர் கிழித்தெறிந்து விட்டார். இதன் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.


நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தனது டுவிட்டரில் “மிக மிக அற்புதம் நிர்மலா சீத்தாராமன். ஒரு பொய்க் கும்பலின் முகத்திரையைக் கிழித்த உங்களின் மிகப் பெரிய ஆற்றலைக் கண்டு நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று கூறியுள்ளார். இவ்வாறு அனைத்து முக்கிய பிரமுகர்களும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனின் நேற்றைய நாடாளுமன்ற பங்களிப்பை வெகுவாக புகழ்ந்துரைத்துள்ளனர்.

Next Story