Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் மசூதியை தாக்கிய கம்யூனிஸ்ட் : ஹிந்து முஸ்லீம் மத கலவரத்தை தூண்டி விட பலே திட்டம்

கேரளாவில் மசூதியை தாக்கிய கம்யூனிஸ்ட் : ஹிந்து முஸ்லீம் மத கலவரத்தை தூண்டி விட பலே திட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Jan 2019 7:21 AM GMT

ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து இயக்கங்களின் சபரிமலை போராட்டம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், ஹிந்து முஸ்லீம் மதத்தினர் இடையே கலவரத்தை உண்டாக்கி பழியை ஹிந்து இயக்கங்கள் மீது போட கேரள கம்யூனிஸ்டுகள் பலே திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலம் பெரம்பாவில் மசூதி மீது கம்யூனிஸ்டுகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கமான D.Y.F.I-யை சேர்ந்த அகில்தாஸ் மற்றும் 20 பேர் மீது பெரம்பா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பிரிவினர்க்கு இடையே வன்முறையை தூண்டியதாக I.P.C - 153A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
https://twitter.com/ANI/status/1081899472341196800?s=19
ஜனவரி 5 ம் தேதி கேரள மாநிலம் தலசேரிக்கு அருகில் உள்ள பா.ஜ.க தலைவர் முரளிதரன் அவர்களின் வீடு தாக்கப்பட்டதோடு, கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. முன்னதாக, சபரிமலை பந்தளத்தில் பா.ஜக. நடத்திய போராட்டத்தில் மார்க்சிஸ்டுகள் புகுந்து ரகளை செய்தனர். பா.ஜ.க வினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஐயப்ப பக்தரும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் (55) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 
சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்
.  இது தொடர்பாக 2 மார்க்சிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை குற்றம் புரிந்த கம்யூனிஸ்டுகளை காக்கும் வகையில், சந்திரன் உன்னிதன் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என்று கேரள கம்யூனிஸ்ட் முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்தார். பிரேத பரிசோதனை நடப்பதற்கு முன்பே கேரள முதல்வர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story