Top
undefined
Begin typing your search above and press return to search.

திருவாரூர் இடைத்தேர்தல் திடீர் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தல் திடீர் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Jan 2019 6:16 AM GMT

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி வருகிற ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது, தி.மு.க சார்பாக பூண்டி கலைவாணன், அ.ம.மு.க சார்பில் காமராஜ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு அ.தி.மு.க, தி.மு.க  உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


இக் கூட்டத்தில் கஜாபுயலால் பெருமளவு பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் இன்னும் நிவாரணப்பணிகள் முழுமடையவில்லை. மக்கள் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கட்சிகள் கோரிக்கை அளித்தன. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story