Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண் என்றும் பார்க்காமல் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பற்றி இராகுல் காந்தி கீழ் தரமான, நாகரீகமற்ற பேச்சு : மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ்

பெண் என்றும் பார்க்காமல் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பற்றி இராகுல் காந்தி கீழ் தரமான, நாகரீகமற்ற பேச்சு : மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Jan 2019 6:10 PM GMT

ரபேல் இராணுவ விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு இராணுவ அமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீத்தாராமன் பதில் அளித்தார். மேலும் காங்கிஸின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அவர் பேசிய பேச்சுக்கும், கேள்விகளுக்கும் இராகுல் காந்தியால் பதில் பேச முடியவில்லை. வாயடைத்துப் போன அவர் தலையில் கையை வைத்தவாறு இருந்தார். இந்த நிலையில் நிர்மலா சீத்தாராமனின் அதிரடி பேச்சு குறித்தும் ரபேல் விவகாரத்தில் அவர் திருப்திகரமாக பதில் அளித்தது குறித்தும் அனைத்து தரப்பு மக்களும் புகழ்ந்தனர். சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் அவரை புகழ்ந்து தள்ளின. இதனால் இராகுல் காந்தி விரக்தி அடைந்த நிலையில் இருந்தார்.


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசும் போது "நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை தராமல் யாரையோ காப்பாற்றுவதற்காக இரண்டரை மணி நேரம் பேசி சமாளித்ததை நீங்கள் எல்லாம் டி.வி.-யில் பார்த்திருப்பீர்கள். அவர் யாரை காப்பாற்ற அவ்வாறு பேசினார் தெரியுமா? 58 அங்குலம் மார்பைக்  கொண்ட அந்த ஆணை காப்பாற்றுவதற்குத் தான். அந்த ஆணும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டார்.


இவரை வைத்து இரண்டரை மணி நேரம் பேசச் சொல்லி நாடாளுமன்றத்தை விட்டு ஓடிப்போய் விட்டார். அவர் போகும் போது “நிர்மலாஜி என்னை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்”  என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிவிட்டார் என்று பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறாக பேசினார். நிர்மலா சீத்தாராமனையும் அவர் ஒரு பெண் அமைச்சர் எனவும் பார்க்காமல் மிகவும் தரம் தாழ்ந்து பேசியது பிரதமர் மோடி உட்பட சக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பா.ஜ.க-வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


இராகுல் காந்தியின் இந்த தரம் கெட்ட பேச்சு குறித்து ஆக்ரா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடி கூறுகையில் "இந்த வார்த்தைகள் நிர்மலா சீத்தாரமன்ஜி யை மட்டும் அவமானப்படுத்தவில்லை. இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து பெண்களும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் முதன் முதலாக ஒரு பெண் இராணுவ அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், ஒரு கம்பீரமான இராணுவ அமைச்சர் பதவிக்குரிய  கவுரவத்தை அவர்கள் சிதைத்துள்ளனர். பொறுப்பற்ற இது போன்ற பேச்சுக்களை பேசும் தலைவர்கள் நிச்சயம் இதற்கான விலையை கொடுப்பார்கள் என இராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.


கடந்த செவ்வாய்க் கிழமை ரபேல் விவகாரம் தொடர்பாக சீத்தாராமன் அளித்த பதில்களால் வாயடைத்து போன இராகுல்காந்தி, அதை சமாளிக்க முடியாமல், பதில் பேச தெரியாமல் விரக்தியிலும், ஆத்திரத்திலும் ஒரு பெண்ணின் மீது வெறுப்பை கக்கியுள்ளார். வெட்கமற்ற, நாகரீகமற்ற இந்த பேச்சுக்காக அவர் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமீத்ஷாவும்  கூறினார்.


தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா இது பற்றி கூறுகையில் “இராகுல் காந்தி பெண்களை எப்படி தரக் குறைவாக எடை போட்டார். பெண்கள் மீது இந்த அளவுக்கு வெறுப்பை கக்கக் கூடாது. கண்ணியத்துக்குரிய இராணுவத் துறைக்கு அமைச்சர் பொறுப்பேற்று இருக்கும் ஒரு இரும்புப் பெண்மணியை இவ்வாறு தரக் குறைவாக விமர்சித்தது தவறு ஆகும். பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என அவர் நினைத்துவிட்டாரோ என்று கண்டித்து பேசினார். மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசிய இராகுல் காந்தியின் பேச்சை மகளிர் ஆணையம் குறிப்பெடுத்துக் கொண்டது என்றும், இது குறித்து இராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இராகுல் காந்தியின் இந்த பொறுப்பற்ற பேச்சு தலை நகர் டெல்லி மற்றும் வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பத்திரிகைகள் இராகுலின் பேச்சுக்கள் முதிர்ச்சியற்ற, குழந்தைத்தனமான, பொறுப்பற்ற பேச்சுக்கள் என வருணித்துள்ளன.

Next Story