Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திர பிரதேசத்தில்யில் சோனியா, ராகுலுக்கு மட்டும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி!

உத்திர பிரதேசத்தில்யில் சோனியா, ராகுலுக்கு மட்டும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி!

உத்திர பிரதேசத்தில்யில் சோனியா, ராகுலுக்கு மட்டும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jan 2019 9:22 AM GMT

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் இடையே லோக்சபா தேர்தல் கூட்டணி முடிவாகியுள்ளது. இந்த 2 கட்சிகளும் மொத்தமுள்ள 80தொகுதிகளில் தலா 36 தொகுதிகள் பிரித்துக் கொண்டன. மீதியுள்ள நான்கு தொகுதிகளில் 2 தொகுதிகளை வேறொரு சிறிய கட்சிகளுக்கும், அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் காங்கிரசுக்கும் விட்டுக் கொடுத்துள்ளன. இக்கட்சிகளின் முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதனை இரு கட்சி தலைவர்களும், கூட்டாக சந்தித்து உறுதி செய்தனர்.அப்போது, மாயாவதி கூறியதாவது: உத்திர பிரதேசத்தில் நாங்கள் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொண்டர்களும் அதனை விரும்பினர். லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் மூலம் நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படும். காங்கிரசை கூட்டணியில் ஏன் சேர்க்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாட்டையும், மாநிலத்தையும் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், அவர்களின் தவறான நிர்வாகத்தால், பல மாநில கட்சிகள் உருவாகின. எங்கள் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியால், இரு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உள்ளன. ஆனால், காங்கிரசை கூட்டணியில் இணைப்பதால், எந்த பலனும் இல்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இதனை கடந்த காலங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளன. காங்கிரஸ் ஓட்டுகளில் மாற்றம் எதுவும் இல்லை. நாட்டில் எந்த பகுதியிலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் வெற்றிகரமான கூட்டணியாக இருக்கும். மஹா கூட்டணி தான் இறுதியானது. மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும், அமேதி மற்றும் ரபேலியில் காங்கிரசுக்கு விட்டு கொடுத்துள்ளோம். இந்த கூட்டணி லோக்சபா தேர்தலை தாண்டியும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News