Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சராக எடியூரப்பா மீண்டும் பதவியேற்பார்: பிரபல ஜோதிடர்கள் கணிப்பால் காங்கிரஸ், குமாரசாமி கட்சியினர் அதிர்ச்சி: எம்.எல்.ஏ-க்கள் ஓட்டலில் அடைப்பு

முதலமைச்சராக எடியூரப்பா மீண்டும் பதவியேற்பார்: பிரபல ஜோதிடர்கள் கணிப்பால் காங்கிரஸ், குமாரசாமி கட்சியினர் அதிர்ச்சி: எம்.எல்.ஏ-க்கள் ஓட்டலில் அடைப்பு

முதலமைச்சராக எடியூரப்பா மீண்டும் பதவியேற்பார்: பிரபல ஜோதிடர்கள் கணிப்பால் காங்கிரஸ், குமாரசாமி கட்சியினர் அதிர்ச்சி: எம்.எல்.ஏ-க்கள் ஓட்டலில் அடைப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2019 5:19 AM GMT

மாயாஜாலம், மந்திர தந்திர வித்தைகள், தாந்த்ரீகங்களுக்கு பெயர்போன மாநிலமாக கேரளாவைக் கூறுவர். அதே போல ஜாதகம், நாடி ஜோதிடம், சுவடி ஜோதிடம், சோழி ஜோதிடம் உட்பட பலவிதமான ஜோதிடங்களுக்கு மிகவும் பெயர்போன இடம் கர்நாடகா. இங்கு சாதாரண மக்கள் முதல் மிகப்பெரிய அரசியல்வாதிகள் வரை கிட்டத்தட்ட அனைவரும் ஜோதிடப் பிரியர்கள்தான்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு காங்கிரசும், குமாரசாமி கட்சியும் சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்துக் கொண்டனர். குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றும் ஆட்சி சரியாக நடைபெறவில்லை. எப்போது ஆட்சி கவிழுமோ என்ற பயத்தில் எரியும் வீட்டில் பிடுங்கியது வரை இலாபம் என்று நினைத்துக் கொண்டு 2 கட்சியினரும் முடிந்தவரை மக்கள் பணத்தை கறந்து வருகின்றனர். சமீபத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை 2 கட்சிகளும் அறிவித்தன. இலட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைய வேண்டிய 26 ஆயிரம் கோடி தள்ளுபடி திட்டத்தை 2 கட்சிகளை சேர்ந்த 800 பிரமுகர்களே அடைந்துவிட்டனர் என மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தள்ளுபடி கிடைக்காத விரக்தியில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கூட்டிய கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆட்சியின் போக்கு குறித்து பல நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர். அப்போது பேசிய குமாரசாமி “ நான் என்ன செய்வது. என்னால் ஒரு முதல்வராக பணியாற்ற முடியவில்லை. காங்கிரஸ் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் நான் ஒரு கிளார்க் போல பணியாற்றுவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாலும், காங்கிரஸ் கட்சியிலுள்ள 5 எம்.எல்.ஏ-க்கள் எதிர் குரல் கொடுக்கத் தொடங்கியதாலும் ஆட்சி எப்போது வேண்டுமென்றாலும் கவிழலாம் என்ற பரிதாபமான நிலை மக்களுக்கு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபித்து கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா விரைவில் பதவியேற்பார் என்று மாநிலத்திலுள்ள பெரும்பான்மையான ஜோதிடர்கள் கணித்துள்ளதால் ஒரு பக்கம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் மற்றொரு பக்கம் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜோதிடர்கள் கண்டிப்பாக எடியூரப்பாதான் மீண்டும் வந்து நிலையான ஆட்சியை தருவார் என்று கூறுவதை கேள்விப்பட்ட காங்கிரஸ் காரர்களுக்கு கிலி ஏற்பட்டு தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டில் அடைத்து வந்துள்ளனராம். இதனால் கர்நாடகத்தில் ரிசார்ட் அரசியல் களை கட்டியுள்ளது. ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விதவிதமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எம்எல்ஏக்கள் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
பலவிதமான பொழுதுபோக்குகளில் எம்எல்ஏக்கள் ஈடுபடுவதாகவும் அங்குள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வதாகவும் ஓட்டல் வட்டாரம் தெரிவித்தது. இதற்கிடையே ஈகள்டன் ரெசார்ட்டில் உள்ள 48 காங். எம்எல்ஏக்களுடன் வண்டர்லாவில் தங்கியுள்ள 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் இணைத்து நேற்று மதியம் முக்கிய ஆலோசனை நடைபெற்ற போதிலும் அதிலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காணவில்லை என்பதால் கர்நாடக அரசியலில் மீண்டும் மாபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜோதிடர்களின் கணிப்பை எம்எல்ஏக்கள் பரிபூரணமாக நம்புவதேயாகும் என கூறப்படுகிறது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News