Kathir News
Begin typing your search above and press return to search.

பிரான்சிடம் இருந்து 3000 ஏவுகணைகள் வாங்க முடிவு - இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் படைத்தவை

பிரான்சிடம் இருந்து 3000 ஏவுகணைகள் வாங்க முடிவு - இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் படைத்தவை

பிரான்சிடம் இருந்து 3000 ஏவுகணைகள் வாங்க முடிவு - இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் படைத்தவை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jan 2019 5:22 PM GMT

பிரான்சிடம் இருந்து ரபேல் விமானத்தை போலவே பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்ட மிட்டு உள்ளது. சுமார் 3000 ஏவுகணை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய விமானப்படையை வலுவாக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் விமானங்கள் 36-யை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.


இதே போன்று அந்நாட்டிடம் இருந்து மேலும் ஆயுத கொள்முதலை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, எதிரி நாடுகளின் பீரங்கிபடைகளுக்கு எதிரான ஆயுதங்களை வாங்கும் முயற்சியில், இந்திய ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதற்காக ₹1000 கோடி செலவில், பிரான்சில் இருந்து 3,000 மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, மிலன் 2டி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவது குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 850 வகையான ஏவுகணைகள் உள்ளன. இந்நிலையில் சுமார் 70,000 பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகள் தேவைப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது.


இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 3000 மிலன் -2டி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மிலன் 2 டி ஏவுகணைகள் வெப்பத்தை அடையாளம் கண்டு இயங்கும் திறன் கொண்டவை. எதிரிநாட்டு பீரங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டு உணர்ந்து, அவற்றின் இருப்பிடத்தை துல்லியமாக கணித்து தாக்கும் திறன் இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. இதனால் இந்திய ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News