Top
undefined
Begin typing your search above and press return to search.

தம்பிதுரை பாஜக குறித்து மனதில் பட்டதை பேசி வருகிறார்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

தம்பிதுரை பாஜக குறித்து மனதில் பட்டதை பேசி வருகிறார்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  22 Jan 2019 10:43 AM GMT

மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: தலைமைச் செயலகத்தில் எனது அறை சீரமைத்து, புதுப்பிக்கப்பட்டு  வழக்கமான கணபதி பூஜைதான் நடந்தது. ஸ்டாலின் கூறுவது போல் யாகம் எதுவும் நடத்தவில்லை. முதல்வரை மாற்ற அவரை எதிர்த்து யாகம் வளர்த்ததாக பொய்யான பித்தலாட்ட அரசியலை ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார்.ஸ்டாலின் கூறியபடி முதல்வர் ஆவதற்கு யாகம் நடத்தலாம் என்றால் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் யாகம் நடத்த வழி இருக்கிறது. ஸ்டாலினுக்கு இந்த மூடநடம்பிக்கையில் நம்பிக்கை இருக்கிறதா? அவர் மூடப்பழக்கத்திற்கு புது அர்த்தம் கண்டுபிடிப்பது தேவையற்றது. எந்த பக்கம் தாவினால் லாபம் கிடைக்கும் என குழம்பிய நிலையில் அவர் உள்ளார்.
எங்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் ஜெ., வழங்கியுள்ள பயிற்சி, திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவோம். பா.ஜ.க, பற்றி கூறிய கருத்திற்கு கட்சி தலைமையிடம் துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் கொடுத்துள்ளார். அவர் மனதில் பட்டதைபேசி வருகிறார்.கட்சி தொண்டர்களை முதல்வராக்கிய பெருமை அ.தி.மு.க., விற்கு மட்டுமே உண்டு, என்றார்.
Next Story