Kathir News
Begin typing your search above and press return to search.

ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ (P.F.I) அமைப்பினர் - யார் இந்த பி.எப்.ஐ? தொடர்புகள் என்ன? எங்கிருந்து நிதி வருகிறது?

ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ (P.F.I) அமைப்பினர் - யார் இந்த பி.எப்.ஐ? தொடர்புகள் என்ன? எங்கிருந்து நிதி வருகிறது?

ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ (P.F.I) அமைப்பினர் - யார் இந்த பி.எப்.ஐ? தொடர்புகள் என்ன? எங்கிருந்து நிதி வருகிறது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Feb 2019 8:23 PM GMT


ராமலிங்கம் படுகொலை


கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.


தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.


பி.எப்.ஐ(P.F.I) தொடர்பு


இந்த நிலையில் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பேர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ (P.F.I) இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.


பி.எப்.ஐ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா


கேரளாவின் நேஷனல் டெமாக்ரட்டிக் பிராண்ட், தமிழகத்தின் மனித நீதி பாசரை மற்றும் கர்நாடகத்தின் போரம் பார் டிக்னிட்டி ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து 2006-ஆம் ஆண்டு கோழிகோட்டில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ). 2009-ஆம் ஆண்டு, மேலும் ஐந்து இயக்கங்கள் பி.எப்.ஐ இயக்கத்துடன் இணைந்தன. 2018-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்த இயக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


கேரள அரசு கோரிக்கை


2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்தது.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த அமைப்பு தொடர்புடையவர்கள் மீது கேரளாவில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அந்த அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரி கேரள மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.


ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு


2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான செய்திகளின் படி, கேரள மாநிலம் கன்னூரில் இருந்து இளைஞர்களை சிரியாவிற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பண புழக்கத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


செய்தி குறிப்புகளின் படி, கேரளாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கதிற்கு பணியமர்த்ப்பட்ட இளைஞர்களுக்கு உள்ளூர் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த K.O.P தஸ்லீம் என்பவர் வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா மூலமாக பணம் அளித்து வந்தது தெரியவந்தது.


தேசிய புலனாய்வு அமைப்பு (N.I.A) சமர்ப்பித்த தகவலின் படி, பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த அப்துல் ரஜாக், மிதிலாஜ், ரஷீத், அப்துல் மனப், முஹம்மத் ஷாஜில், அப்துல் காயோம் ஆகியோர் உள்பட ஷமீர் என்பவர் இணைந்து கேரள இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளைகுடா நாடுகளில் இருந்து நிதி


தேசிய புலனாய்வு அமைப்பு (N.I.A) சமர்ப்பித்த தரவுகளின் படி, 2017 ஆம் ஆண்டு, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், "இந்தியா பிரட்டர்னிட்டி போரம்(I.F.F) என்ற வளைகுடா நாடுகளில் இயங்கும் அமைப்பின் மூலமாக பி.எப்.ஐ (P.F.I) இயக்கத்திற்கு நிதி வருகிறது. I.F.F இயக்கத்தின் மூலம் நேரடியாக நிதி சேகரிக்கப்படுவதில்லை என்றாலும் பரிவர்த்தனைகளை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் உள்ள PFI இயக்கத்தின் தினசரி ஊடகமான "தேஜாஸ்" ஊடக ஸ்டுடியோ தொடங்குவதற்கு நிதி உதவியை P.F.I இயக்கம் பெற்றிருக்கலாம் என்று கோப்புகள் கூறுகிறது. இதற்காக கர்நாடக இஸ்லாமிய வணிகர்களிடமிருந்தும் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியில் (IDB) இருந்து நிதிகளை திரட்டிக் கொண்டிருக்கிறது பி.எப்.ஐ-யால் துவங்கப்பட்ட தொண்டு நிறுவனமான(M.R.N) எம்.ஆர்.என். உலக முஸ்லிம் இளைஞர் சங்கமான (W.A.M.Y) உடனும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பி.எப்.ஐ இயக்கத்தில் இணைவதற்கு ₹10 முதல் ₹1,000 வரை உறுப்பினர் கட்டணமாகவும், ரமதான் கொண்டாட்ட நிதியாகவும் வசூலிக்கப்படுகிறது. முஸ்லிம் வணிகர்கள் மற்றும் அனுதாபிகள் மூலம் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுவதற்காக நிதி வசூலிக்கப்படுகிறது.


ஹிந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் 2016–ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்த கொலையை தொடர்ந்து கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க நிர்வாகிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த நிலையில் தான் மத மாற்றத்தை தடுத்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News