Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவை தொழிலதிபர் பற்றிய படத்துக்கு உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது.. மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்து சாதனை புரிந்தவர்.!

கோவை தொழிலதிபர் பற்றிய படத்துக்கு உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது.. மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்து சாதனை புரிந்தவர்.!

SG SuryahBy : SG Suryah

  |  25 Feb 2019 9:40 AM GMT


இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ் (Period: The End of Sentence)  ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டியில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் வெற்றிப் பெற்றுள்ளது.


இம்முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஓர் இந்தியத் ஆவணப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இந்திய–ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இப்படத்தினை இயக்கியிருந்தார்.


மாதவிடாய் பற்றிய கருத்தினை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான கருத்துகளையும், புரிதல்களையும் சித்தரிக்கும் வண்ணமாகப் படம் நகர்த்தப்பட்டிருக்கிறது.


மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது. 


அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர்.


வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர்.


ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.


Next Story