Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய இராணுவம் எங்களை துவம்சம் செய்தது உண்மைதான்.. மசூத் அசாரின் சகோதரன் தகவல்.!

இந்திய இராணுவம் எங்களை துவம்சம் செய்தது உண்மைதான்.. மசூத் அசாரின் சகோதரன் தகவல்.!

SG SuryahBy : SG Suryah

  |  3 March 2019 11:00 AM GMT


ஜம்மு - காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, பாக்.,கை சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிர் இழந்தனர்.


இந்த தாக்குதலுக்கு பதிலடி தர வேண்டும் என்ற எண்ணம், நாட்டு மக்களிடையே வலுப்பெற்றது. அதை நனவாக்கும் வகையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த, 'மிராஜ் - 2000' ரக போர் விமானங்கள், பாலக்கோட்டில் உள்ள, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத முகாம் மீது, சரமாரி தாக்குதல் நடத்தின. இதில், அந்த முகாம் தவிடுபொடியானது. ஆனால், இதனை மறுத்த பாகிஸ்தான் ராணுவம், காலி இடத்தில் தான் இந்தியா குண்டு போட்டதாக கூறி வருகிறது.


இந்நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரன் மவுலானா அம்மர் பேசிய ஆடியோ கிளிப் ஒன்று வெளியாகியுள்ளது.


மவுலானா அம்மர் பேசிய ஆடியோவில்; பாகிஸ்தான் ராணுவம் , மற்றும் அரசு அலுவலகம் மீது இந்தியா குண்டுபோடவில்லை. இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி வந்து, ஜிகாதி குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட மையத்தில் வெடிகுண்டுகளை வீசியது. எங்களின் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான்.


இவ்வாறு அம்மர் கூறியுள்ளான். என்றாலும் பலியானவர்கள் மற்றும் தாக்குதல் சேதங்கள் குறித்து அவன் மறைத்துள்ளான் என கூறப்படுகிறது.


Next Story