Top
undefined
Begin typing your search above and press return to search.

தே.மு.தி.க-விற்கு 4 தொகுதிகள் : அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணியில் இணைந்த கேப்டன் விஜயகாந்த்

தே.மு.தி.க-விற்கு 4 தொகுதிகள் : அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணியில் இணைந்த கேப்டன் விஜயகாந்த்

SG SuryahBy : SG Suryah

  |  10 March 2019 3:51 PM GMT


சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி உடன்பாடு குறித்து இன்று மாலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகம் அடைந்ததை இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தில் விஜயகாந்தும், ஓ.பன்னீர்செல்வமும் கையொப்பமிட்டனர் என்று கூறப்படுகிறது.


தே.மு.தி.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இருதரப்பும் சேர்ந்து அதிகாரபூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி தொடரும் என தே.மு.தி.க தெரிவித்துள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க-விற்கு தே.மு.தி.க ஆதரவு.




https://twitter.com/ThanthiTV/status/1104768775163863040?s=19

Next Story