Top
undefined
Begin typing your search above and press return to search.

22 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு ₹800 கோடி வரை செலவு மிச்சம் : மோடி அரசின் அசாத்திய நடவடிக்கை

22 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு ₹800 கோடி வரை செலவு மிச்சம் : மோடி அரசின் அசாத்திய நடவடிக்கை

SG SuryahBy : SG Suryah

  |  9 March 2019 8:48 PM GMT


மத்தியில் மோடி அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து ஏழை எளிய மக்களின் உடல் நலத்திற்காக பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ்மான் பாரத், ஜன் அவுஷதி, தேசிய டையலைஸிஸ் திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.


அந்த வகையில் தற்போது, புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 மருந்துகளின் விலையை 87% வரை குறைத்து மத்திய மோடி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பிற மருத்துவச் செலவுகளை விட புற்றுநோயாளிகளுக்கு இரண்டரை மடங்கு மருந்து செலவு அதிகமாவதைக் கருதி ஏற்கெனவே கடந்த 27-ம் தேதி புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 42 மருந்துகளின் விலையை மத்திய அரசு வர்த்தக இலக்கு இடைவெளியை 30 சதவீதத்துக்கு கீழ் குறைத்தது.


இதனைத் தொடர்ந்து புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது மொத்தமுள்ள புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 426 மருந்துகளில் 91 சதவீதம் ஆகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள 22 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு ₹800 கோடி வரை செலவு மிச்சமாகும் என ஜீ தமிழ் செய்தி குறிப்பிட்டுள்ளது. குறைக்கப்பட்ட மருந்துகளின் முழு விவரங்களை nppaindia.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.


மேலும், இரசாயன மருந்துகள் மற்றும் உரங்களின் அமைச்சகத்தின் கீழ் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) 390 புற்றுநோயற்ற, அல்லாத திட்டமிடப்பட்ட மருந்துகளின் பட்டியலை வெளியிட்டது, அதன் MRP க்கள் 87% வரை குறைக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


Next Story