Kathir News
Begin typing your search above and press return to search.

பணம் காய்க்கும் மரம் வேண்டும்.. வேட்பாளர்கள் விவகாரத்தில் திமுக வைக்கும் செக்..?

பணம் காய்க்கும் மரம் வேண்டும்.. வேட்பாளர்கள் விவகாரத்தில் திமுக வைக்கும் செக்..?

பணம் காய்க்கும் மரம் வேண்டும்.. வேட்பாளர்கள் விவகாரத்தில் திமுக வைக்கும் செக்..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 March 2019 3:46 AM GMT


நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் யார் யாரை போட்டி யிட வைக்கலாம் என ஒரு முடிவு எடுத்துள்ளது திமுக.


தூத்துக்குடியில் கனிமொழி, நீலகிரியில் ராஜா, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வேலூரில் கதிர் ஆனந்த், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு என பல தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களைத் திமுக உறுதி செய்துள்ளது.
இதனால் அந்தத் தொகுதி களுக்கு ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்த மற்ற பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மற்ற தொகுதிகளில் ‘சீட்’ கேட்டவர்கள் ஸ்டாலின் குடும்பத்தினரையும் மாவட்ட செயலர்களையும் பிடித்து கட்சி தலை மைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


வட சென்னை, தென் சென் னையில் பணபலம் படைத்த, கட்சியினரிடம் நன்கு அறிமுக மான புதுமுக வேட்பாளர்களை நிறுத்த திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதால் அந்தத் தொகுதி களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங் கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் அதிகமுள்ள கட்சி என்பதால் ‘சீட்’ பெற அவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி தலைவர்கள் வழியாக ‘சீட்’ பெறுவதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.
அதிமுகவும் திமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுத்த இடங்கள் போக தலா 20 தொகுதிகளில் போட்டியிடு கின்றன.
அதனால் அதிமுக களம் இறங்கவுள்ள 20 தொகுதிகளி லும் இடங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.


யாரை பிடித்தால் ‘சீட்’ வாங்கலாம் என கட்சியினர் அலைபாய்கின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. யாருக்கு எந்தத் தொகுதி என்பது முடிவாகிவிட்டதால் அங்கு போட்டி எதுவுமில்லை. மற்ற கட்சிகளில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ‘சீட்’ என்பதால் போட்டி குறைவாகவே உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News