Top
undefined
Begin typing your search above and press return to search.

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை சாத்தியம்தான்: தமிழக அரசுக்கு மத்திய அரசு உதவும்.. பா.ஜ.க, பொது செயலர் கே.டி.ராகவன்.!

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை சாத்தியம்தான்: தமிழக அரசுக்கு மத்திய அரசு உதவும்.. பா.ஜ.க, பொது செயலர் கே.டி.ராகவன்.!

SG SuryahBy : SG Suryah

  |  21 March 2019 3:13 AM GMT


திமுகவின் தேர்தல் அறிக்கை வார்த்தை ஜாலம் என்றும், அதே சமயம் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை உட்பட மாநில அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு உதவும் என்றும் தமிழக பா.ஜ.க, செயலர் கே.டி.ராகவன் கூறினார்.


தமிழக பாஜக காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கு அடுத்ததாக, 'நீர்வளத்தையும், நிலவளத்தையும், பாதிக்கும் வகையில் கொண்டு வரப்படும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதால், அவற்றை கைவிட வலியுறுத்தப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


'சிறப்பு வேளாண் மண்டல மாக அறிவிக்கப்படும்' என, நேரடியாக சொன்னதைப் போல, 'சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களையும் கைவிடுவோம்' என, அறிவிக்காமல், 'வலியுறுத்துவோம்' என, குறிப்பிட்டிருப்பதன் வாயிலாக, தி.மு.க.,வின் வார்த்தை ஜால ஏமாற்றும் வித்தை வெளிப்படுகிறது.


ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது, கல்விக் கடனை ரத்து செய்திருக்கலாம்; ஏன் செய்யவில்லை?செய்ய விரும்பாத விஷயத்தை, செய்கிறேன் என சொல்வது, காதில் பூ சுற்றும் வேலை.


வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும், ஏழை மக்களை கை துாக்கி விடுவது தான், பா.ஜ.க, அரசின் நோக்கம். அதனால் தான், இலவச காஸ் இணைப்பு, அனைவருக்கும் வீடு, மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.காங்கிரஸ் ஆட்சியில், நேரடி வரி வருவாய், 6.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மறைமுக வரி, மாதத்திற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்படுகிறது.


எனவே, விவசாயிகளுக்கு, ஓர் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதியுதவியை, மத்திய அரசும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் நிதியுதவியை, மாநில அரசும் வழங்கும் என அறிவித்திருப்பது, சாத்தியம் தான்.


மாநில அரசின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மாநில தமிழக பா.ஜ.க, செயலர் கே.டி.ராகவன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story