Top
undefined
Begin typing your search above and press return to search.

கேவளம் பஜ்ஜியை கூட பிடுங்கி சாப்பிடறாங்க தி.மு.க.வை சேர்ந்தவங்க.. பழனிசாமி வேதனை.!

கேவளம் பஜ்ஜியை கூட பிடுங்கி சாப்பிடறாங்க தி.மு.க.வை சேர்ந்தவங்க.. பழனிசாமி வேதனை.!

SG SuryahBy : SG Suryah

  |  25 March 2019 6:20 AM GMT


பஜ்ஜியை கூட பணம் கொடுக்காமல் ஓசியில் பிடுங்கி சாப்பிடுறாங்க, ஓசி தேங்காய், பத்தி கேட்டு மிரட்டுவதாக திமுகவை விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திருப்பத்தூரில் வாக்கு சேகரிப்பின் போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:


நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது எப்படி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியும். திமுக எதிர்கட்சியாக இருக்கும் போதே பல இடங்களில் ரவுடித்தனத்தை செய்து வருகின்றனர்.


திருவண்ணாமலை கோவில் முன்பு உள்ள கடைகளில் ஓசியாக தேங்காய், ஊதுபத்தி கேட்டு மிரட்டுகின்றனர். கேவளம் பஜ்ஜியை கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுகின்றனர்.


இவர்கள் ஆட்சியில் இல்லாமலே இப்படி ரவுடித்தனம் செய்கின்றனர். இன்னும் ஆட்சிக்கு வந்தால் இவர்களால் தமிழகம் என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.


ஆனால், திமுக ரவுடி ராஜ்யத்துக்கு அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவர்களால் ஒரு போதும் மக்களுக்கு நன்மை ஏற்படாது என்றார்.


Next Story