Kathir News
Begin typing your search above and press return to search.

விண்வெளி போரை எதிர்கொள்ளும் 4 வது வல்லமை மிக்க நாடாக இந்தியா நிரூபித்துள்ளது.. நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பெருமிதம்.!

விண்வெளி போரை எதிர்கொள்ளும் 4 வது வல்லமை மிக்க நாடாக இந்தியா நிரூபித்துள்ளது.. நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பெருமிதம்.!

விண்வெளி போரை எதிர்கொள்ளும் 4 வது வல்லமை மிக்க நாடாக இந்தியா நிரூபித்துள்ளது.. நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பெருமிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 March 2019 9:21 AM GMT


போரின்போது செயற்கை கோள்கள் மீதான தாக்குதல்களை தொடுத்தல், மற்றும் பிறநாடுகளின் உளவு செயற்கை கோள்களை முறியடித்தல் ஆகிய வல்லமையை உலகில் இது வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே பெற்றுள்ள நிலையில் இந்தியாவும் இன்று அந்த சாதனையை நிகழ்த்தி நான்காவது விண்வெளி வல்லமை பொருந்திய நாடாக தன்னை நிரூபித்துள்ளது. பிரதமர் இன்று அந்த நல்ல செய்தியை நாட்டு மக்களிடம் உரையாற்றி பகிர்ந்துகொண்டார்.


அவர் கூறியதாவது: இந்தியாவின் மாபெரும் முயற்சிக்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது. அதாவது நம்மை வேவு பார்க்கும், தாக்க வரும் செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது.


தாழ் நீள்வட்ட பாதையில் சென்ற ஒரு சோதனை செயற்கை கோளை இன்று இந்தியா கீழிருந்தவாறே துல்லியமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரிலான தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியது. மூன்றே நிமிடங்களில் இந்த மிஷன் சக்தி வெற்றி பெற்றது.


அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பிறகு செயற்கை கோள் எதிர்ப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியது தற்போது இந்தியா தான். இதையடுத்து, விண்வெளி தொழில்நுட்பத்தில் தற்போது இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் வான் சக்தியை நிலைநாட்டும் வகையில் இந்த மிஷன் சக்தி அரங்கேற்றப்பட்டது.


விண்வெளி போட்டியில் ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தியா செயற்கை கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது என்றும், விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஏவுகணை தற்போது இந்தியாவிடம் உள்ளது என்றும் இந்திய செயற்கை கோள்களை பாதுகாக்கும் வகையில் இன்று ஒரு செயற்கை கோளை சுட்டு வீழ்த்தினோம் என்றும் மோடி கூறினார்.


இதையடுத்து விண்வெளியில் சக்தி மிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4வது இடம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். பூமியில் இருந்து 300 கி.மீ தொலைவில் சுற்றி வந்த செயற்கை கோளை இந்தியா வீழ்த்தியுள்ளதுதாகவும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளதாகவும், நாட்டு மக்களுக்கும், மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் பிதமர் குறிப்பிட்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News