Top
undefined
Begin typing your search above and press return to search.

ஏழுமலையானை தூற்றிய கனிமொழி : தேர்தல் பயத்தில் தாயார் முருகப்பெருமானிடம் சரண் ! - Dr. தமிழிசைக்கு போட்டியாக பலத்த பூஜை

ஏழுமலையானை தூற்றிய கனிமொழி : தேர்தல் பயத்தில் தாயார் முருகப்பெருமானிடம் சரண் ! - Dr. தமிழிசைக்கு போட்டியாக பலத்த பூஜை

SG SuryahBy : SG Suryah

  |  27 March 2019 7:57 PM GMT


தி.மு.க சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கலைஞரின் மகளும் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி, ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து மத சடங்குகளையும் தூற்றுவது வழக்கம். ஆனால், தற்போது தேர்தல் பயம் காரணமாக ஹிந்து தெய்வங்களை தனது தாயாரும், கலைஞரின் துணைவியாருமான ராசாத்தி அம்மாள் வழிபட்டு பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார் போல் தெரிகிறது.


முதன்முறையாக கனிமொழி நேரடித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளரான தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.


எனவே இருவருமே வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 24-ஆம் தேதி திருச்சந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த தமிழிசை, அங்கு நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் பங்கேற்றார். இந்த யாகமானது எதிரிகளைவீழ்த்துவதற்கு நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி பெற்ற அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.


இந்நிலையில் தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்டார் என்று தினமணி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கு பெற்றார் கனிமொழியின் வெற்றிக்காக அவர் வேண்டிக் கொண்டார் என்று தெரிகிறது.


அவருக்கு கோயில் அர்ச்சகர் பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சாற்றப்பட்ட பட்டுத்துணி, வேலும் சேவற்கொடியும் பிரசாதமாக வழங்கினார். பின்னர், கோயில் வளாகத்தில் யானை தெய்வானைக்கு பழம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றார். ராசாத்தி அம்மாளிடம் கோயிலில் பூஜை செய்தது குறித்து கேட்டதற்கு, "தேர்தலில் என் மகளை முருகப் பெருமான் வெற்றி பெறச் செய்தாலே போதும்" என்றார் என்று விகடன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


அப்போது முன்னாள் அமைச்சர் தமிழரசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மந்திரமூர்த்தி, பொன் முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர் என்று தினத்தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் மகளும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான கனிமொழியின் வெற்றிக்காக அவரது தாயார் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


முன்னதாக சென்ற ஆண்டு, கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "திருப்பதி திருமலை கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?'' எனப் பேசி இருந்தார்.


கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமகோபாலன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்து முன்னணி அமைப்பினர் சென்னை காவல் ஆணையரிடம் தி.மு.க எம்.பி. கனிமொழி மீது புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story