Top
undefined
Begin typing your search above and press return to search.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - தி.மு.க பிரமுகர் அரங்கேற்றிய படுகேவலமான செயல்..?

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - தி.மு.க பிரமுகர் அரங்கேற்றிய படுகேவலமான செயல்..?

SG SuryahBy : SG Suryah

  |  29 March 2019 8:00 AM GMT


ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திமுக பிரமுகரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லை புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டிய சேலம் ரயில்வே காவல் நிலைய தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சென்னையில் இருந்து கடந்த 10-ம் தேதி இரவு 9.30 மணியளவில் நீலகிரி விரைவு ரயிலில் கோவையைச் சேர்ந்த கர்ப்பணிப் பெண்ணும், அவரது கணவரும் பயணம் செய்தனர். அதே ரயிலில் கோவை இருகூரை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான 65 வயதுடைய சந்திரன் பயணம் செய்தார்.இந்த ரயில் சேலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சந்திரனும், அவருடன் வந்த மற்றொருவரும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் திமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்தனர்.


சேலம் ஜங்ஷனில் ரயில் வந்து நின்றதும் இறங்கிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணும், அவரது கணவரும் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் கோவை ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி எடுத்துரைத்து புகார் அளித்தார். அவரின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட கோவை ரயில்வே போலீசார் சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


பின்னர் கர்ப்பிணியின் கணவர் சேலம் வரவழைக்கப்பட்டு அவரிடம் சேலம் ரயில்வே போலீசார் புகார் வாங்கினர். அதன்பின்னர் இருகூர் சென்று சந்திரனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி, சந்திரனை வரும் 11-ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பாலியல் தொல்லை புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டிய சேலம் ரயில்வே காவல் நிலைய தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தியை ரயில்வே காவல்துறை எஸ்.பி. ரோகித் நாதன் ராஜகோபால் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.


Next Story