Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க-வின் பணபல அராஜகத்தால் வேலூரில் தேர்தல் இரத்தாகிறதா..? தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை விவரம்..!

தி.மு.க-வின் பணபல அராஜகத்தால் வேலூரில் தேர்தல் இரத்தாகிறதா..? தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை விவரம்..!

SG SuryahBy : SG Suryah

  |  3 April 2019 1:13 PM GMT


வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைத் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு, வருமானவரித்துறையினர், அறிக்கை அனுப்பியுள்ளனர்.


வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு, வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவருடைய மகனும், திமுக சார்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் நடத்தி வரும் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.


முதல்நாள் சோதனையில், கணக்கில் வராத 10 லட்ச ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு ஒரு நாள் இடைவெளி விட்டு திமுக பிரமுகரான சீனிவாசன் என்பவரது சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில், மூட்டை, மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டது.


மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனையில், 11 கோடியே 63 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, வருமான வரித்துறைச் சோதனையில், கட்டுக்கட்டாக வாக்காளர்களுக்கு கொடுக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் பணம், கோடிக்கணக்கில் சிக்கியிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், வேலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.


இதுதொடர்பான முடிவை, வருமானவரித்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் எடுக்கும் என, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருந்தார். இந்நிலையில், வருமானவரித்துறை சோதனை முடிவுற்று, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, வருமானவரித்துறை அதிகாரிகள், வேலூரில் நடைபெற்ற சோதனை குறித்த விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளனர்.


அந்த அறிக்கையில், எதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது? என்றும், கைப்பற்றப்பட பணம் யாருடையது? என்றும், மேலும் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன? வேறு ஏதும் பணம் கைமாறியிருக்கிறதா? என்பது பற்றிய ஆவணங்கள், விளக்கங்களை உள்ளடக்கிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story