Top
undefined
Begin typing your search above and press return to search.

வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

SG SuryahBy : SG Suryah

  |  8 April 2019 12:33 PM GMT


நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் 50 உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யப்படும் மற்றும் எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்த அவர், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசியல் அமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.2022க்குள் அனைத்து ரயில் நிலையங்களும் மின்மயமாக்கப்படும் என்றும் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story