Top
undefined
Begin typing your search above and press return to search.

பாஜக தேர்தல் அறிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவேற்பு ! தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!! பாஜக தொண்டர்கள் சுறு சுறுப்பு!!!

பாஜக தேர்தல் அறிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவேற்பு ! தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!! பாஜக தொண்டர்கள் சுறு சுறுப்பு!!!

SG SuryahBy : SG Suryah

  |  9 April 2019 11:12 AM GMT



நதிகள் இணைப்பு என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் திட்டமாக நதிகள் இணைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது நதிகள் இணைக்கப்படும், அதற்காக ஆணையம் அமைக்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே இதை தாம் வலியுறுத்தியதாகவும், இப்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது உண்மையில் வரவேற்கத்தக்க விஷயம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


ரஜினிகாந்த் முன்பொருமுறை கூறுகையில் யார் நதிகள் இணைப்பு மற்றும் தமிழகத்துக்கான தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்கிறார்களோ, யார் நம்பகமான திட்டங்களுடன் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என் ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார் என்றும் எனவே இந்த விஷயத்தில் நாட்டில் உள்ள கட்சிகளில் பாஜகதான் பல மாநிலங்களில் நதிகள் இணைப்பு மற்றும் நீர் பாசன மேலாண்மை திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருவதாகவும், தமிழகத்துக்கான தண்ணீர் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் வட தமிழக நதிகளை கோதாவரி நதியுடன் இணைக்கும் திட்டங்களை முன் வைத்துள்ளதாகவும் ,எனவே பாஜகவுக்குதான் ரஜினிகாந்த் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்களில் பாஜகவினர் உட்பட இணையவாசிகள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக ரஜினிகாந்த் கூறினார்.


Next Story