Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் வலிமையான அரசு தேவை: பா.ஜ.க-வுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்! பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் 900 பேர் கூட்டறிக்கை!

மீண்டும் வலிமையான அரசு தேவை: பா.ஜ.க-வுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்! பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் 900 பேர் கூட்டறிக்கை!

மீண்டும் வலிமையான அரசு தேவை: பா.ஜ.க-வுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்! பாலிவுட்  சினிமா நட்சத்திரங்கள் 900 பேர் கூட்டறிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 April 2019 7:06 AM GMT


‘‘நாட்டுக்கு வலிமையான அரசு தேவை. அதற்கு பிரதமராக மோடி நீடிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று திரை நட்சத்திரங்கள் 900பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


திரை நட்சத்திரங்கள் பண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரீடா கங்குலி, சங்கர் மகாதேவன், திரிலோகி நாத் மிஸ்ரா, கொய்னா மித்ரா, அனுராதா பத்வால், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் உட்பட 900 பேர் கையெழுத்திட்டு பாஜக.வுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அந்தக் கூட்டறிக்கையில் திரை நட்சத்திரங்கள் கூறியிருப்பதாவது: நாட்டுக்கு இந்த நேரத்தில் வலிமையான அரசு தேவைப்படுகிறது. பயனில்லாத அரசு வேண்டாம். எனவே பாஜக.வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிந்து வாக்களிக்க வேண்டாம். பாரபட்சம் இல்லாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும்.


இந்த நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. நம்முன் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற சவால்கள் நிறைந்த இந்த வேளையில் தற்போது மோடி அரசு நீடிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.


ஊழல் இல்லாத சிறந்த நிர்வாகத்தைத் தந்த மத்திய அரசை கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா பார்த்துள்ளது. வளர்ச்சியை மையமிட்ட ஒரு மத்திய அரசை நாடு சந்தித்தது. எனவே,மோடி தலைமையிலான அரசு நீடிக்க பொதுமக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கூட்டறிகையில் 900 நட்சத்திரங்கள் கூறியுள்ளனர்.


‘பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆட்சியில் இருந்து அனுப்ப வாக்களியுங்கள்’ என்று அமோல் பலேகர், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், உஷா கங்குலி உட்பட 600-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் கடந்த வாரம் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதற்கு பதிலடியாக நேற்று 900 திரை நட்சத்திரங்கள், பாஜக.வுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News