Top
undefined
Begin typing your search above and press return to search.

நம் இந்தியாவில் என்னைவிட உழைப்பவர்கள் யார்-யார் என்று தெரியுமா ? நச்சென்று பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி!

நம் இந்தியாவில் என்னைவிட உழைப்பவர்கள் யார்-யார் என்று தெரியுமா ? நச்சென்று பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி!

SG SuryahBy : SG Suryah

  |  13 April 2019 10:59 AM GMT


பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தினத்தந்தி பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.  அப்போது அவரிடம் தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பிரதமர் மோடி அவர்கள் பதில் கூறுகையில்:


நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை மறந்து, வீட்டிலுள்ளவர்களை மறந்து கடமையை மட்டுமே நினைத்து பணியாற்றும் காவல்துறையினர், விடியற்காலையில் எழுந்து இருட்டுநேரத்திலேயே எருது மாடுகளை கட்டுத் தறிகளில் இருந்து அவிழ்த்துக் கொண்டு, அவற்றை கையில் பிடித்துக் கொண்டு, இன்னொருபுறம் இரும்பு கலப்பையை தோளில் சுமந்து கொண்டு, ஒற்றையடி பாதையில் தட்டுத்தடுமாறாமல், தங்கள் வயல் காட்டுக்கு சென்று, ஏர் உழுது, மாலை வரை உழைக்கும் விவசாயிகள் உட்பட இவர்கள் அனைவரும் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர்.


இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே. நாட்டு மக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.


கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது என்றும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பிரதமர் பதில் கூறுகையில்:


இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர்.


நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.


பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்:


ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா? அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா? அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள் இவ்வாறு பல கேள்விகளுக்கு பதில் கூறினார்.


Next Story