Top
undefined
Begin typing your search above and press return to search.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறாரா ? ஊடகங்களுக்கு நச்சுன்னு பதில் சொன்ன ரஜினிகாந்த் !

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறாரா ? ஊடகங்களுக்கு  நச்சுன்னு  பதில் சொன்ன ரஜினிகாந்த் !

SG SuryahBy : SG Suryah

  |  19 April 2019 11:28 AM GMT



சில மாதங்கள் முன்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த்திடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்து உள்ளார்களே என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ஒருவருக்கு எதிராக நிறைய பேர் ஒன்று திரண்டால் யார் பலசாலி என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதன்மூலம் நரேந்திர மோடியை பலசாலி என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.


இன்று சென்னையில் நிருபர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியை நிருபர்கள் முன்வைத்தனர்.


நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது மே 23-ஆம் தேதி கண்டிப்பாக தெரிந்துவிடும் என்று கூறினார். அந்த தேதியில்தான் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story