Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய அறிவியல் கழகங்களை தோற்றுவித்தவர்கள் ஆற்காடு ராமசாமி முதலியாரும், ஷியாமா பிரசாத் முகர்ஜியும் தான் - நேரு கிடையாது! ஓர் அலசல்!

இந்திய அறிவியல் கழகங்களை தோற்றுவித்தவர்கள் ஆற்காடு ராமசாமி முதலியாரும், ஷியாமா பிரசாத் முகர்ஜியும் தான் - நேரு கிடையாது! ஓர் அலசல்!

SG SuryahBy : SG Suryah

  |  22 April 2019 3:30 AM GMT


அறிவியல் முன்னேற்றத்துக்காக ஜவஹர்லால் நேரு எந்த வித அக்கறையும் காட்டத போதும் அவரும், அவருடைய ஆதரவாளர்களும் அறிவியல் முன்னேற்றத்துக்கான இந்தியாவின் முக்கியமான விஞ்ஞான கழகங்களை உருவாக்கியதன் பின்னணயில் தாங்கள்தான் அனைத்தையும் செய்யததாக கூறிக் கொண்டு யாரோ செய்த பணிகளுக்காக தங்களுக்கு தானே சான்றிதழ் வழங்கிக் கொண்ட சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வெளி வந்துள்ளன.


இந்திரா காந்தி கூட ஒருமுறை மற்றவர்கள் குறித்து ஒரு கருத்து கூறுகையில் "இருவேறு நபர்கள் உள்ளனர், ஒருவர் பாடுபடுகிறார் ஆனால் வேறொருவர் அதற்கான பலனை பெற்று விடுகிறார்" என்றார். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் இந்திராவின் குடும்பத்துக்கு பொருந்தும். மற்றவர்களின் சாதனைகளை அவர்கள் தங்கள் சாதனையாக கூறி பெருமிதம் அடைகிறார்கள்.


சசி தரூர் போன்ற நேரு குடும்பத்தின் தொண்டரடி பொடியார்கள் நேரு தான் இந்திய அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி என்றும் அவர்தான் இந்திய அறிவியல் வளர்ச்சிக்கான நிறுவனங்கள் அனைத்தையும் இந்தியாவில் உருவாக்கிய தந்தை என்றும் கூறி வருகின்றனர். இந்த அப்பட்டமான பொய்யை அடிக்கடி உலக மாணவர்கள் சமுதாயத்தின் முன்பாக அடிக்கடி பேசி ஒரு பொய்யை உண்மையாக அரங்கேற்றிவிட்டார்கள். சசி தரூர் இன்னும் ஒருபடி மேலே சென்று இன்றைக்கு சிலிக்கான் வேலியில் உள்ள 40% ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு காரணமே நேருவின் அன்றைய அறிவியல் வளர்ச்சிக்கான சாதனைகளே என்று கூறி தனது பொய்யை மேலும், மேலும் மெருகூட்டுகிறார்.


ஆனால், உண்மையில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR )ஆற்காடு ராமசாமி முதலியார் அவர்களின் சீரிய சிந்தனை மற்றும் முயற்சியால் உருவாக்கப்பட்டு 1940-ஆம் ஆண்டு செயல்பாட்டை அடைந்தது. இதை கட்டுவித்தவர் டாக்டர் ஷியாமபிரசாத் முகர்ஜி. ஆனால் இந்த நிறுவனத்தை உருவாக்கியதில் நேருவுக்கு எந்த ஒரு பங்கும் இல்லாவிட்டால் கூட அவர் பிரதமர் பதவிக்கு வந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அவரின் பெயரை கவுரவ தலைவராக CSIR நிறுவன நிர்வாக அமைப்பில் இணைத்தனர்.


இந்த காலக்கட்டத்தில் நேரு ஒருமுறை இங்கு பேசும்போது "இந்த நிறுவன வளர்ச்சிக்காக நான் நேரத்தை ஓதுக்க முடியவில்லை, என்றாலும் இதன் தினசரி பணிகளை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி கவனித்துக் கொள்வார்" என்று கூறினார்.


இந்த காலகட்டத்தில்தான் தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம், தேசிய உலோகவியல் ஆய்வுக்கூடம், எரிபொருள் ஆய்வு நிறுவனம், மண்பாண்ட ஆராய்ச்சி மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை உட்பட பல ஆய்வகங்கள் ஷியாமபிரசாத் முகர்ஜி அவர்களால் நிறுவப்பட்டன. பியாக்ரா, மேட்டூர், ஷிமோகா மற்றும் சிவசமுத்ரம் ஆகிய மின் நிலையங்களுக்கிடையில் மின் தொகுப்பு அமைப்பும் ஷியாமபிரசாத் முகர்ஜி அவர்களின் திட்டப்படி அமைந்தன.


1940-க்கும் முன்பாகவே இந்தியா ஏற்கனவே விஞ்ஞான முன்னேற்றத்துக்கான உள்கட்டமைப்பை கொண்டிருந்தது. இந்தியாவின் இந்து நாகரிகம் பல நூற்றாண்டுகளாகவே பல விஞ்ஞான கருத்துகளையும் விஞ்ஞானிகளையும் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனம், 1876-ஆம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் சங்கம், இந்திய அறிவியல் நிறுவனம், பண்டிட் மதன் மோகன் மாலவியாவால் நிறுவப்பட்டிருந்தது. இந்திய புள்ளிவிவர நிறுவன மையம், மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமண்டல் ரிசர்ச் ஆகியவையும் நேரு பதவிக்கு வரும் முன்பே உருவாகி இருந்தது.


ஆனால் நேருவும் அவருடைய ஆதரவாளர்களும் தாங்கள்தான் அந்த நிறுவனங்களை உருவாக்கியதாக பெயர் எடுத்துக் கொண்டனர். பொதுத்துறைப் பிரிவுகளில், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் வால்சண்ட் ஹிராசந்தினால் ஒரு தனியார் வணிகமாக நிறுவப்பட்டது. மேலும் பிரிட்டனுக்கு போருக்கு தேவையான விமானங்களை கூட தயாரித்து கொடுத்துள்ளது, நேரு தலைமையிலான அரசாங்கம் பொதுத்துறை நிறுவனமாக இதை எடுத்துக் கொண்ட பிறகு தான் இந்த மாபெரும் நிறுவனத்திந் அழிவே தொடங்கியது என்கின்றனர் வல்லுனர்கள்.


அதேபோல இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மற்றும் அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்(AIIMS) நிறுவனங்களின் தொடக்கத்துக்கும் ஜவகர்லால் நேருவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1945-ஆம் ஆண்டு என்.எம்.சிர்கார் குழு அறிக்கையின் சிபாரிசுப்படியும், டாக்டர் முகர்ஜி மற்றும் என்.ஜி. ரங்கா இடையே நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதங்களின் விளைவாக மேற்படி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.


AIIMS நிறுவனத்தை உருவாக்கும் கமிட்டி டாக்டர் ஆற்காடு லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டவர் ஷியாமபிரசாத் முகர்ஜியாவார். அகில இந்திய மருத்துவக் கழகம் அமைக்கும் யோசனையை முதலில் நாடாளுமன்றத்தில் என்.ஜி. ரங்கா வைத்த போது வீட்டு வசதி பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும், இது ஒன்றும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறியவர் ஜவகர்லால் நேரு. நேருவின் இந்த எதிர்ப்பு கருத்தை கண்டித்து வெளியில் பேசி சாதித்தவர் என்.ஜி. ரங்கா.


இது பொதுவாக நேருவின் வாய் வித்தை மற்றும் பேச்சாற்றலால் சாதிக்கப்பட்ட பொய்யான சாதனைகளாகும். அவர் பேசியது எவ்வளவோ! ஆவடி மாநாட்டில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அவர் பேசும்போது "இரண்டாவது ஐந்தாவது திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும், புரட்சிகரமான இயந்திரமய திட்டங்களால் சோவியத் யூனியன் பாணியில் விவசாயத்தை மாற்றப்போவதாகவும் அதன் மூலம் விவசாய தொழிலாலர்கள் வாழ்க்கை ரஷ்ய நாட்டு தொழிலாளர்கள் போல உயரும் என்றும், தொழிலாளர்கள் வாழ்வில் மாபெரும் புரட்சி நடக்கப்போவதாகவும்" பேசினார்.


ஆனால், பசுமை புரட்சி நடைபெற்றது என்னமோ உண்மைதான். ஆனால் விவசாய தொழிலாளர்கள் வாழ்வில் எதுவும் நடந்து விடவில்லை. ஆனால், அவருடைய பேச்சு அப்படி. அவரைப்போலவே பொய் பேசி அவருக்கு ஆதரவாக பேசுபவர்களுக்குமே மட்டுமே அவர் தன்னிஷ்டப்படி பதவிகளை வழங்கினார். உண்மையில் அவரும் அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவளார்கள் மட்டுமே அறிவுஜீவிகளாக அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர். அவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிகளில் அமர்ந்து இந்த நாட்டின் வளங்களை கட்டியாண்டனர். ஆடம்பர வாழ்வை வாழ்ந்தனர். அது இப்போதும் அவருடைய குடும்ப ஆட்சில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


உண்மையில் சோவியத் யூனியனில் முன்பு வாழ்ந்த "nomenklatura" என்று அழைக்கப்படும் ஒரு ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் அவர்களுக்கு அவர்களே பட்டங்களையும், விருதுகளையும் வழங்கிக் கொள்வார்களாம் அதே போன்றவர்கள்தான் இவர்களும். நேருவின் இந்த கதை இன்றும் அவர் குடும்ப அளவிலும், அவர்களின் குடும்பத்துக்கு தொண்டரடி பொடியாழ்வார்களாக இருக்கும் ஆதரவாளர்களிடையேயும் நிலவிக் கொண்டு தான் உள்ளது. இவர்களை நினைக்கும் போது "பாடுபடுபவன் ஒருத்தன் பயனடைபவன் ஒருத்தன்" என்கிற பழமொழியும், "விதைப்பவன் ஒருவன் அறுவடை செய்பவன் வேறொருவன்" என்கிற பழமொழிகள்தான் ஞாபகம் வருகிறது.


Translated Article from The Sunday Guardian Live


Next Story