Top
undefined
Begin typing your search above and press return to search.

தோற்றாலும் பரவாயில்லை ! வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் !! கொக்கரிக்கும் பிரியங்கா ராபர்ட் வதேரா!

தோற்றாலும் பரவாயில்லை ! வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் !! கொக்கரிக்கும் பிரியங்கா ராபர்ட் வதேரா!

SG SuryahBy : SG Suryah

  |  24 April 2019 1:10 PM GMT



வெற்றியோ, தோல்வியோ வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என கட்சி தலைமையிடம் பிரியங்கா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நிகழ்சிகளுக்கு கூட்டத்தை சேர்ப்பது கட்சியினருக்கு சவாலாக உள்ளது. அவரது பேச்சிலும் சுவாரசியம் இல்லாததால் கூட்டம் பாதியில் வெளியேறுகிறது. இந்த நிலையில் அவருடைய சகோதரியும், பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி ஜாமீனில் இருப்பவருமான ராபர்ட் வதேராவின் மனைவியுமான பிரியங்கா காந்தி பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றால்தான் ஓரளவு கூட்டம் கூடும் நிலைமை வடா இந்தியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் சகோதரி பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோனியாவையே மீண்டும் காங்கிரஸ் களமிறக்கியது. ரேபரேலியில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா பேசிய போது, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அப்போது பிரியங்கா “வாரணாசியில் போட்டியிட வேண்டாமா?” என்ற பதில் கேள்வியை எழுப்பினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்ததாக கூறப்படுகிறது.


வாரணாசியில் போட்டியிட பிரியங்கா ஆர்வமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிய தொடங்கி விட்டது. ஆனால் பிரியங்காவின் போட்டி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் உயர்மட்ட தகவல்கள் தொடர்ந்து கூறி வருகிறது . “கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் போட்டியிட தயார்” என பிரியங்கா கூறி விட்டார். அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளதால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் பார்ப்பதாகவும், வாரணாசி அதற்கு சரியான இடமாக இருக்குமா? என்று ஆய்வு செய்வதாகவும் தகவல் வெளியாகியது.


இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பிரியங்கா தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனக்கு வெற்றி, தோல்வியை பற்றியெல்லாம் கவலை கிடையாது “ மோடியை எதிர்ப்பேன்” என ஸ்திரமாக பிரியங்கா தெரிவித்து விட்டதாக தெரிகிறது.https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/24160030/General-Election-2019-Priyanka-Gandhi-From-Varanasi.vpf


Next Story