Top
undefined
Begin typing your search above and press return to search.

வாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

வாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

SG SuryahBy : SG Suryah

  |  25 April 2019 12:51 PM GMT


வாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது.
நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.
2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது.
பேரணியில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர்.


Next Story