Top
undefined
Begin typing your search above and press return to search.

மாற்று மின்சக்தியில் மாற்றம் காணும் இந்தியா - 7,500 மெகாவாட் வரை உயரும் சூரியசக்தி மின் உற்பத்தி.!

மாற்று மின்சக்தியில் மாற்றம் காணும் இந்தியா -  7,500 மெகாவாட் வரை உயரும் சூரியசக்தி மின் உற்பத்தி.!

SG SuryahBy : SG Suryah

  |  26 April 2019 5:20 AM GMT


நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,500 மெகா வாட் வரை உயரும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.


நம் நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுவதில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை 1 லட்சம் மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கிரிசில் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 2022-ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட்டாகவும், 2023-ல் 70,000 மெகா வாட்டாகவும் உயரும் என்று தெரிகிறது.


2018 டிசம்பர் இறுதி நிலவரப்படி நம் நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 28,050 மெகா வாட்டை எட்டி உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) சுமார் 9,000 மெகா வாட் அதிகரித்து, பிறகு 2022-23 வரை ஆண்டுக்கு 10,000 மெகா வாட் அதிகரிக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு உற்பத்தி திறன் அதிகரிப்பில் மேற்கூரை சூரியமின் தகடுகளின் பங்கு 1,000 மெகா வாட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளது.


Next Story