Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் கையிருப்பு தொகை 38 ஆயிரத்து 750 ரூபாய் மட்டுமே!! வேட்புமனு தாக்கலின் போது விவரம்!

பிரதமர் மோடியின் கையிருப்பு தொகை 38 ஆயிரத்து 750 ரூபாய் மட்டுமே!! வேட்புமனு தாக்கலின் போது விவரம்!

SG SuryahBy : SG Suryah

  |  27 April 2019 5:15 AM GMT



பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.


இதனையொட்டி அவர் தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், நகைகள் உள்பட அசையும் சொத்துக்களாக 1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 119 ரூபாய் எனவும் வீடு நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளின் மதிப்பு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , அவரிடம் சொந்த வாகனங்கள் மற்றும் வங்கி கடன் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட தொகை ஏதும் பாக்கி இல்லை என்றும் கூறியுள்ளார். மோடியுடம் 45 கிராம் மதிப்புள்ள 4 மோதிரம் உள்ளதாகவும், அவற்றின் தற்போதைய மதிப்பு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். கையிருப்பு தொகை 38 ஆயிரத்து 750 ரூபாய் உள்ளதெனவும், குறிப்பிட்டுள்ளார்.


Next Story