Top
undefined
Begin typing your search above and press return to search.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்: அரசு முடிவை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு !

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்: அரசு முடிவை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு  !

SG SuryahBy : SG Suryah

  |  29 April 2019 1:43 PM GMT



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தமிழக அரசு நியமித்தது.


இதை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது அரசு, சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம் என்றும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விஷால் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார் .


Next Story