Top
undefined
Begin typing your search above and press return to search.

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா படத்தை போஸ்டரில் போட்டு வாக்கு சேகரிக்கும் திமுகவினர் !! வெட்கம், சூடு, சொரணை இல்லையா என கேட்கும் நெட்டிசன்கள் !

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா படத்தை போஸ்டரில் போட்டு  வாக்கு சேகரிக்கும் திமுகவினர் !!  வெட்கம், சூடு, சொரணை இல்லையா என கேட்கும்  நெட்டிசன்கள் !

SG SuryahBy : SG Suryah

  |  30 April 2019 5:33 AM GMT



திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பா.சரவணன் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்காக திமுகவினர் அச்சிட்ட போஸ்டர்களில் ஜெயலலிதா படத்தை பெரிதாக போட்டு , அவருடைய ஆசி இவர்களுக்குத்தான் என்றும், துரோகிகளின் தோலை உரியுங்கள் என்று அவர் கூறுவது போலவும் இந்த போஸ்டரில் உள்ளது.
திருப்பரங்குன்றம் ஜெயலலதாவின் செல்வாக்கான தொகுதி என்பதால் அதிமுக , அம்முக 2 கட்சிகளும் ஜெயலலதாவின் ஆசியோடு போட்டியிடுவதாக போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் திமுகவினரும் இதே பாணியில் வாக்கு கேட்பது பல அதிமுகவினரை உசுப்பேற்றியுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு ஸ்டாலின் அம்மா ஜெயலலிதாவை நீ, வா ,போ என ஒருமையில் மரியாதை குறைவாக பேசிவந்தார் என்றும் , அம்மாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது என பேசியவர் ஸ்டாலின் என்றும், இப்போது தேர்தல் என்று வந்ததும் வெட்கம் இல்லாமல் அம்மா படத்தை வைத்துக் கொண்டு வாக்கு சேகரிப்பதாக அதிமுகவினர் குமுறி வருகின்றனர். இந்த போஸ்டரையும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story