Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தனது பேச்சில் தேர்தல் விதி முறைகளை மீறவில்லை!! ராகுல் புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் !

பிரதமர் மோடி தனது பேச்சில் தேர்தல் விதி முறைகளை மீறவில்லை!! ராகுல் புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் !

SG SuryahBy : SG Suryah

  |  1 May 2019 7:41 AM GMT



காங்., தலைவர் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது தொடர்பாக பிரதமர் மோடி பேசியது தேர்தல் விதிமீறல் ஆகாது என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.


ஏப்.,1 ம் தேதி மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்துக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் போட்டியிட காங்., தலைவர்கள் பயப்படுகிறார்கள்.
அதனால் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதியில் வேறு வழியின்றி அடைக்கலம் புகுந்து, போட்டியிடுகிறார்கள் என்றார். பிரதமரின் இந்த பேச்சு பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது என காங்., குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் புகார் அளித்திருந்தது.


பிரதமர் மோடி மீது தேர்தல் விதிகளை மீறியதாக பல புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக தேர்தல் கமிஷன் இதுவரை அமைதி காத்துவந்தது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக பிரதமர் மீதான புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
அதில், பிரதமரின் பேச்சு குறித்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிகளை மீறும் வகையில் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.


Next Story