Kathir News
Begin typing your search above and press return to search.

விடுமுறை நாட்களில் குதூகலமாக இருக்க கப்பற்படை INS Virat - ஐ பயன்படுத்தியதா சோனியா குடும்பம் ? “பங்காரம் விடுமுறை” - அதிரவைக்கும் ரிப்போர்ட்

விடுமுறை நாட்களில் குதூகலமாக இருக்க கப்பற்படை INS Virat - ஐ பயன்படுத்தியதா சோனியா குடும்பம் ? “பங்காரம் விடுமுறை” - அதிரவைக்கும் ரிப்போர்ட்

விடுமுறை நாட்களில் குதூகலமாக இருக்க கப்பற்படை INS Virat - ஐ பயன்படுத்தியதா சோனியா குடும்பம் ? “பங்காரம் விடுமுறை” - அதிரவைக்கும் ரிப்போர்ட்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2019 9:55 AM GMT


1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி குடும்பத்துடன் 10 நாட்கள் விடுமுறையை குதூகலமாக செலவிட லட்சதீவுகளை தேர்ந்தெடுத்தார். 30 தீவுகளில் மிக சிறிய தீவான பங்காரத்தை தேர்ந்தெடுத்தார். மங்களூருவில் இருந்து பங்காரம் செல்ல இந்திய கடற்படையை சேர்ந்த INS Virat - ஐ பயன்படுத்தியுள்ளார்


INS Virat என்பது சாதாரண கப்பல் அல்ல, மிகவும் வலிமை வாய்ந்த போர் கப்பல். போர் விமானங்கள், போர் ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்தது. எந்த ஒரு கடல் வழி தாக்குதலையும் திறன்பட எதிர்கொள்ளும். பல அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியது.


முதல் அடுக்கு - வான் வழி தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும்.
இரண்டாம் அடுக்கு - நீர் அடியில் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும்,
மைய கரு - பதில் தாக்குதலுக்கு தேவையான அணைத்து ஆயுதங்களையும் தாங்கியிருக்கும். இவ்வளுவு சக்தி வாய்ந்த கப்பலை சொந்த குடும்பத்தின் விடுமுறைக்காக பயன்படுத்தியுள்ளது ராஜிவ் - சோனியா குடும்பம்.


விடுமுறை நாட்களில் பங்கேற்றவர்கள் - ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா, ராகுலின் நண்பர்கள், சோனியாவின் தங்கை, அவரின் கணவர், சோனியாவின் தாய், சோனியாவின் மாமா, ஜெயா பச்சன் மற்றும் அவரின் குழுந்தைகள். அமிதாப் பச்சன் ஒரு நாள் கடந்து ஹெலிகாப்டரில் பங்காரம் சென்றுள்ளார். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை சேர்ந்த ஒரு புகைப்பட நிபுணர் 4 படங்களாக எடுத்து செய்தி வெளியிட்டார்.


நிர்வாக ஹெலிகாப்டர் வந்து செல்ல இடம், மத்திய அரசின் சுற்றுலா துறை அதிகாரிகள், கோழி பண்ணை, இந்தியாவின் முன்னணி சமையல் வல்லுநர்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மது, நீர் பணம், பழங்கள். பிரதமரை பாதுகாக்க தேவையான அணைத்து நவீன வசதிகளையும் அந்த சிறு தீவில் செய்துள்ளனர்.


இந்த கட்டுரையை இந்த நேரத்தில் சமர்ப்பிக்க காரணம் - எப்படி ராஜிவ் சோனியா குடும்பம் தங்கள் ஆட்சிக்காலத்தில் அரசின், அதுவும் முக்கிய பாதுகாப்பு பணியில் இருக்கும் கப்பலை பயன்படுத்துள்ளனர். இதை அனுமதிக்க அதிகாரிகளை தூண்டியுள்ளனர். விடுமுறையை குதூகலமாக கொண்டாட இந்திய கப்பற்படை கப்பலை இத்தாலி நாட்டு பிரஜைகளை ஏற்றினர் என்பதை நினைவூட்டவே. சதா சர்வ காலமும் மோடியை குறைகூறும் இந்த கும்பல் செய்த அதிகார துஷ்ப்ரயோகத்தின் ஒரு சான்றே “பங்காரம் விடுமுறை”. தற்போதய பிரதமர் ஒரு நாள் கூட விடுமுறையும் எடுக்க வில்லை. அவரின் குடும்பத்தை டெல்லி கூட அழைத்து செல்லவில்லை. இன்றும் அவர்கள் மளிகை கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்துகிறார்கள்
இந்த சூழலில் வளர்ந்த ராகுலும், பிரியங்காவும் எப்படி நாட்டுக்காக உழைப்பார்கள்?


ஏன் ஒரு ஊடகம் கூட இதை பெரிதாக்கவில்லை? யார் போர்க்கப்பலை பயன்படுத்த அனுமதி அளித்தார் ? ஏன் போர்க்கப்பலில் இத்தாலி நாட்டவரை அனுமதித்தனர்? என்ற கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை. நாடாவை நடந்தவையே, ஆனால் மீண்டும் இந்த குடும்பத்திடம் நாட்டை ஒப்படைப்பதை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News