Top
undefined
Begin typing your search above and press return to search.

5 ம் கட்ட தேர்தலிலேயே பாஜக ஆட்சியை நிச்சயம் செய்துவிட்டது : கள நிலவர ஆதாரங்களுடன் வடநாட்டு அரசியல் ஜாம்பவான்களின் ஒரு நிதர்சன அலசல் !

5 ம் கட்ட தேர்தலிலேயே  பாஜக  ஆட்சியை நிச்சயம் செய்துவிட்டது : கள நிலவர ஆதாரங்களுடன் வடநாட்டு அரசியல் ஜாம்பவான்களின் ஒரு நிதர்சன அலசல் !

SG SuryahBy : SG Suryah

  |  7 May 2019 12:37 PM GMT



நடைபெற்ற 5 ம் கட்ட தேர்தலில் 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது .ஜம்மு காஷ்மீர்-2 மத்திய பிரதேசம்-7 ராஜஸ்தான்-12 உத்தரபிரதேசம் -14 பீகார்-5 ஜார்கண்ட் -4 மேற்கு வங்காளம்-7 என்று 51 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி 40 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. இதில் இருந்து 5 ம் கட்ட தேர்தல் பிஜேபி க்கு எவ்வளவு


முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த 51 தொகுதிகளில் குறைந்தது பிஜேபிக்கு 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.


இது வரை நடைபெற்று ள்ள 4 கட்ட தேர்தல்களி லும் பிஜேபிக்கு 180-190 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் பிஜேபி கூட்டணிக்கு 230-240 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று சில கணி ப்புகள் கூறுவதால் 5 ம் கட்ட தேர்தலில் பிஜேபி க்கு 40 தொகுதிகள் வரை கிடைக்கும் என்பதால் பிஜேபி கூட்டணி 270-280 வரை தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்து விட்டது.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் 5 ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.. அமேதி. ரேபரேலி. தாருக்ரா. சிதாபூர். லக்னோ மோகன்லால் கன்ஞ். பாரபங்கி.பைசாபாத் கோண்டா. கைசர்கஞ்ச். பஹ்ராய்ச்.கௌசாம்பி. பதேபூர். பாண்டா ஆகிய 14 தொகுதிகளில் அமேதி ரேபரேலியை தவிர ஏனைய 12 தொகுதிகளிலும் கடந்த 2014 லோக்ச பா தேர்தலில் பிஜேபியே வெற்றி பெற்று இருந்தது.


.ஆனால் இப்பொழுது சமாஜ்வாடி கட்சி பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் பிஜேபிக்கு தோல்வி கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள்.மிகக்குறைவு.காரணம் என்ன வென்றால் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு வாக்குகளான யாதவர்களும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு வாக்குகளான ஜாடவ் என்கிற தலித் இன மக்களும் என்றும் சமூக ரீதியாக இணைந்ததே இல்லை.


அதனால் யாதவர்களும் ஜாடவ் தலித் மக்களும் அரசியல் ரீதியாக இணைந்து ஒரு கூட்டணி யில் இருக்க வாய்ப்புகள் இல்லை. அதனால் இந்த கூட்டணி தோல்வியடைகிறது.அது மட்டுமல்லாது தலித் மக்களில் பாசி என்கிற தலித் மக்கள் பிஜேபி க்கு ஆதரவாக இருக்கிறார்கள். உத்தரபிர தேசத்தில் சுமார் 23 சதவீத உயர் சாதியினரின் வாக்குகள் இருக்கிறது. இது அப்படியே பிஜேபிக்கு செல்கிறது உயர்சாதி யினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தர


பிரதேசத்தில் உள்ள உயர்சாதியினரை அப்படியே பிஜேபிக்கு ஆதரவாக கொண்டு வருகிறது.அதோடு யாதவர்களை தவிர ஏனைய ஓபிசி வகையில் வரும் குர்மி.மௌர்யா.கோரி.சைனி.சாக்யா காச்சி முதலிய சாதி மக்களின் ஆதரவு பிஜேபிக்கு இருக்கிறது.


யாதவ வாக்குகளை கூட முலாயம் சிங் யாதவின் தம்பி சிவ்பால் யாதவின் கட்சியான பிரகதீச்சல் சமாஜ்வாடி பார்ட்டி (லோகியா) சமாஜ் வாடி கட்சி யின் ஆதரவு வாக்குகளான யாதவ வாக்குகளை பிரிக்கிறது. அதோடு இதனுடன். கூட்ட ணி வைத்துள்ள பீஸ் பார்ட்டி என்கிற முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் வாக்குகளை பிரிக்கிறது.


அது மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் 19 சதவீத முஸ்லிம்வாக்குகளை சரி பாதியாக பிரிப்பதால் முஸ்லிம் வாக்குகளும் தலித் வாக்குகளும் யாதவ வாக்குகளும் முழுமையாக கிடைக்காமல் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணி தோல்வியை தழுவுகிறது. ஆனால் பிஜேபி அப்னா தளம். நிசாத் பார்ட்டி போன்ற கட்சிகளின் துணையுடன் ஓபிசி மக்களின் வாக்குகளை முழுமையாக பெறுகிறது.


பிஜேபி தன்னுடைய கூட்டணி வலிமையால் 50 சதவீத வாக்குகள் வரை பெற வாய்ப்புகள் இருக்கிறது.ஆனால் பிஜேபிக்கு எதிரான வாக்குகள் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி சிவ்பால் யாதவ் கட்சி யின்கூட்டணி காங்கிரஸ் கூட்டணி என்று மூன்று வழிகளில் பிரிவதால் உத்தரபிரதேசத்தில் பிஜேபி யின் மாபெரும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.


நடைபெற்ற 5 ம் கட்ட தேர்தலில் பிஜேபிக்கு 14 தொகுதிகளில் 13 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அமேதியில் ராகுலை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாச த்தில் ஸ்மிருதி இரானி தோற்கடிக்கிறார். சோனியாவுக்கு கூட வெற்றி உறுதியல்ல என்பதே ரேபரேலி தொகுதி நிலவரம்.


அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளில் அனந்த்நாக் தொகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது. அதனால் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இங்கு பிஜேபிக்கு வேலை இல்லை.


அதனால் மக்கள் ஜனநாயக கட்சி அதாவது பிடிபிக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும் தான் போட்டி. இதில் பிடிபி வேட்பாளராக பிடிபி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மகபூபா முக்தி போட்டியிடுவதால் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் இன்னொரு தொகுதி லடாக் .கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி வெறும் 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லடாக் தொகுதியை பொறுத்தவரை சுயேச்சை


களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் தொகுதி. வழக்கமாக காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள இந்த லடாக் தொகுதியில் இரண்டு முக்கியமான சுயேச்சை கள் பிரிக்கும் வாக்குகளை பொறுத்து பிஜேபிக்கு அதிர்ஷ்டவசமாக வெற்றி கிடைக்கும்


ஆனாலும் காங்கிரஸ்க்கு தான் வெற்றி பெற முதல் வாய்ப்பு இருக்கிறது. அடுத்து மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள 7 தொகுதிகளைப் பற்றி பார்ப்போம்.ரேவா. திகாம்கர்.கஜூரஹோ.சத்னா.தமோக்.ஹோசன்காபாத்.பெட்டல் என்று 7 லோக்சபாகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த7 தொகுதிகளிலும் பிஜேபியே கடந்த 2014 லோ க்சபா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.இதில் சத்னா தொகுதியை தவிர மீதி 6 லோக்சபா தொ குதிகளிலும் பிஜேபி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


அதனால் இப்பொழுதும் இந்த சத்னா தொகுதியி ல் மட்டுமே. போட்டி இருக்கிறது.ஏனைய 6 தொகு திகளிலும் காங்கிரஸ் கட்சி களத்திலேயே இ ல்லை என்பதே உண்மையான நிலவரம் .எனவே மத்திய பிரதேசத்தில் நாளை வாக்கு ப்பதிவு நடைபெறும் 7 லோக்சபா தொகுதிகளில் 6 தொகு


திகளில் பிஜேபிக்கு உறுதியான வெற்றி இருக்கி றது., சத்னா தொகுதியிலும் வெற்றி பெற வா ய்ப்பு இருக்கிறது. அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று வாக்கு பதிவு நடைபெறும் 12 லோக்சபா தொகுதிகளி லும் கடந்த. 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபியே வெற்றி பெற்றுள்ளது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதி களில் தான் வெற்றி வாய்ப்புள்ளது.


கௌராலி தோல்ப்பூர் மற்றும் நாகர் லோக்சபா தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது. அதிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிரிக்கும் வாக்குகளை பொறுத்தே இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது.


ஏனைய ஜெய்ப்பூர். ஜெய்ப்பூர் ரூரல்.தௌசா பாரத்பூர். ஆல்வார். சிகார். ஷுரு.ஜுன்ஜ்ஹுனு. பிகானெர்.கங்கா நகர் ஆகிய 10 தொகுதிகளி லும் பிஜேபி க்கு 100 சதவீத உறுதி. கடைசி கட்ட மாக கௌராலி தோல்ப்பூர் மற்றும் நாகர் தொகுதிகளில் கூட பிஜேபிக்கு வெற்றி கிடைக்கலாம்.


அடுத்து பீகாரில் தேர்தல் நடைபெற்ற சரன்.ஹாஜீபூர். மதுபானி. சிதாமர்ஹி மற்றும் முசாபர்பூர் ஆகிய 5 தொகுதிகளிலும் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி கூட்டணியே வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறையும்


எதிர் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத தால் பிஜேபி கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது.


சரன் மதுபானி மற்றும் முசாபர்பூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பிஜேபி வெல்கிறது.ஹாஜீபூர் ராம்விலாஸ்பஸ்வான் தொகுதி மட்டுமல்ல லோக் ஜனசக்தி கட்சியின் கோட்டையாகும். அதனால் அங்கு பிஜேபியின் கூட்டணி யான லோக்ஜன சக்தி கட்சிக்கு கிடைக்கும்.


இன்னொரு தொகுதியான சிதாமர்ஹியில் கடந்த தேர்தலில் பிஜேபிகூட்டணி யில் இருந்த ராஷ்டிரி ய லோக் சமதாபார்ட்டி இப்பொழுது வெளியேறி விட்டதால் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிஜேபிகூட்டணியில் போட்டியிடுகிறது. வெற்றி யும் பிஜேபி கூட்டணி யில் இருக்கும் ஐக்கிய ஜனதாதளத்திற்கு தான்.


அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா.. ஹ சாரிபக்.ஹூண்டி மற்றும் ராஞ்சி ஆகிய 4 லோக் சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.. இந்த 4 தொகுதிகளிலும் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபியே வெற்றி பெற்றுஇருந்தது. இப்பொழுது காங்கிரஸ் கூட்டணி வலிமையாகஇருப்பதால் ஹூண்டியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற முடியும். ஏனைய கோட ர்மா.ஹசாரிபக்.மற்றும் ராஞ்சி ஆகிய 3 தொகுதி களும் பிஜேபிக்கு தான்.


அடுத்து கடைசியாக மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பங்கோன்.பாரக்பூர் ஹௌரா.உலுபெரியா.சீராம்பூர்.ஹூக்ளி மற்றும் அரம்பக் ஆகிய 7 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்பு வெற்றி பெற்று இருந்தது. ஆனால் பிஜேபி ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2-3 லட்சம் வாக்குகள் பெற்று இருந்தது.


இப்பொழுது மேற்கு வங்காளத்தில் பிஜேபியின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாலும் இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் ஓட்டுக்கள் பிஜேபிக்கு வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கடுமையாக பிஜேபி போட்டி போடுகிறது. அதனால் பங்கோன் பாரக்பூர் மற்றும் ஹௌரா ஆகிய மூன்று தொகுதிகளில் பிஜேபிக்கும் ஏனைய நான்கு தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.


எப்படி இருந்தாலும் பிஜேபிக்கு 5 ம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகள் வரை கிடைக்கும் என்பதால் 5 ம் கட்ட தேர்தலின் முடிவிலேயே பிஜேபி குறைந்தது 230 தொகுதிகளையும் பிஜேபி கூட்டணிக்கு 270 தொகுதிகளும் கிடைக்கும் என்பதால் இன்றே பிஜேபி ஆட்சி அமைக்கும் வல்லமையை பெற்று விடுகிறது.


இன்னும் இரண்டு கட்ட தேர்தலில் 118 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அதில் பிஜேபிக்கு 80 தொகுதிகளும் பிஜேபி கூட்டணி க்கு 100 தொகுதிகளும் கிடைக்கும் என்பதால் பிஜேபி 300 தொகுதிகளை தாண்டுவதும் பிஜேபி கூட்டணி 370 தொகுதிகளை பெறுவதும் நிச்சயமாகி விட்டது.


Next Story