Top
undefined
Begin typing your search above and press return to search.

போபால் தொகுதியில் பிரக்யாவுக்கு ஆதரவாக உமாபாரதி அசர வைக்கும் அதிரடி பிரச்சாரம் : பயந்துபோன திக்விஜய் சிங் சாமியார்களை திரட்டி பிரச்சார முயற்சி !!

போபால் தொகுதியில் பிரக்யாவுக்கு ஆதரவாக உமாபாரதி  அசர வைக்கும் அதிரடி பிரச்சாரம் : பயந்துபோன திக்விஜய் சிங் சாமியார்களை திரட்டி பிரச்சார முயற்சி !!

SG SuryahBy : SG Suryah

  |  7 May 2019 8:26 AM GMT


வரும், 12ல் தேர்தலை சந்திக்கும், போபால் தொகுதி தான், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியின் ஆணவத்தால் பாதிப்புக்கு உள்ளான பெண் சாமியார், பிரக்யா தாக்குர் சிங். இவர் இந்த தொகுதியில், பா.ஜ.க, சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான, திக்விஜய் சிங் நிற்கிறார்.


போபால் தொகுதியில் அவர், பெண் சாமியார் பிரக்யாவை எதிர்கொண்டதிலிருந்து போட்டி மிகவும் கடுமையாகிவிட்டது. பெண் சாமியாரின் அனல் கக்கும் பிரச்சாரம், தன்னை போலி வழக்கில் சிக்க வைத்து திக்விஜய் சிங் செய்த கொடுமைகளை பேசுகிறார். இந்த நிலையில் பிரக்யா தாக்குர் சிங்கை எப்படியாவது வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்ற வெறியில் போபால் தொகுதியின் பொறுப்பை பா.ஜ.க மூத்த அமைச்சரும், மத்திய அமைச்சர் உமா பாரதி அங்கு களம் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் இந்த தொகுதியில் ஏற்கனவே எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும், முன்னாள் முதல்வர் என்பதாலும் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் வெற்றி தனக்கு சுலபமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நினைத்த திக்விஜய்சிங்குக்கு இப்போது நிலைமை சிம்ம சொப்பனமாக மாறிவிட்டது. இந்த நிலையில் தமது ஆஸ்தான குருவான துவாரகா பீடத்தின், சுவாமி சொரூபானந்தாவிடம் சரணாகதி அடைந்துள்ளார். அந்த சாமியாரும் தனக்குள்ள மடத்து செல்வாக்கை பயன்படுத்தி ஆயிரம் சாமியார்களை திக்விஜய்சிங்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூறியுள்ளாராம்.


மேலும் பாரம்பரியமாக இது, பா.ஜ.க தொகுதி என்பதால், திக்விஜய் சிங்கின் வெற்றி பெறுவது கடினமென்றும், யாருக்கு வெற்றி என்றாலும் இழுபறியாகத் தான் இருக்கும் எனவும், பா.ஜ.க-வுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது.


Next Story