Top
undefined
Begin typing your search above and press return to search.

கமல் மீண்டும் சினிமாவிற்கு ஓட்டம்! அரசியலில் பெண்கள் திரும்பிகூட பார்க்காததால் முழுக்குபோட முடிவு?

கமல் மீண்டும் சினிமாவிற்கு ஓட்டம்! அரசியலில் பெண்கள் திரும்பிகூட பார்க்காததால் முழுக்குபோட முடிவு?

SG SuryahBy : SG Suryah

  |  9 May 2019 11:10 AM GMT


நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கியதும், அரசியலுக்காக நடிப்பை தியாகம் செய்யவும் தயார் என்று சவடால் விட்டார். தொடர்ந்து பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். தீவிரபிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


அரசியலிலுக்கு வந்தால் எம்.ஜி.ஆரைப் போன்று செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலை மோதும் என்றும், பெண்கள் ஆதரவு தாறுமாறாக இருக்கும் என்று கற்பனையில் அவர் மிதந்துள்ளார்.


ஆனால் அவரின் கனவில் மண்ணைவாரி போட்டது யதார்த்தமான அரசியல் களம். அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்மாறாக இருந்தது ஆதரவு. வந்தகூட்டமும் தானா சேர்ந்த கூட்டம் அல்ல. காசு கொடுத்து அழைத்து வந்த கூட்டம்.


தமிழகத்தில் நடந்த 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்களிலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மிகக்குறைவானவர்களே கமலின் மையம் கட்சிக்கு ஓட்டு போட்டு உள்ளனர். ஒரே ஒரு எம்.பி. தொகுதிகூட கிடைக்காது என்பதுகூட பரவாயில்லை ஒரு எம்.எல்.ஏ தொகுதியும் கிடைக்காது என்று கூறி உள்ளனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.இதைக்கேட்டதும் கமல் அதிர்ந்துபோய் விட்டார். அதைவிட பெண்களின் ஓட்டு சுத்தமாக அவருக்கு இல்லை என்றதும் பேரதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு அதிர்ச்சி முடியவில்லை.


தினகரன், சீமான்… இவர்களின் வேட்பாளர்களைவிட குறைவான ஓட்டுகளே கமலின் கட்சி வேட்பார்களுக்கு கிடைக்கும் என்ற அடுத்த குண்டைதூக்கி போட்டுள்ளனர். அந்த அதிர்ச்சியில் விழுந்தவர்தான் எங்கு போனார்? என்ன ஆனார்? என்றுகூட தெரியவில்லை. சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான கமல் கட்சி வேட்ப்பாளர் அறிவிப்பின்போதுதான் மீண்டும் வந்தார்.


இதில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்கப்போவதில்லை என்பது இப்போதே அவருக்கு தெரிந்துவிட்டது.


அரசியலில் உலக நாயகனின் நடிப்பை மக்கள் ரசிக்கவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே முகத்தில் கரியை பூசிவிட்டனர் தமிழர்கள் என்பது அவருக்கு தேர்தலுக்கு முன்பாகவே புரிந்துவிட்டது.


மு.க.ஸ்டாலினுக்காவது மே-23 அன்று ஓட்டு எண்ணுவதுவரை முதல்வர் நாற்காலியில் அமர்வது போல் கனவுகாணும் வாய்ப்பாவது கிடைத்தது. கமலுக்கு அந்தமாதிரி கனவு காணும் வாய்ப்பைக்கூட மக்கள் வழங்கவில்லை.


இதனால் நொந்தபோன கமலஹாசன் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் சினிமா பக்கம் போக முடிவு செய்துள்ளார். சினிமாவிலும் குறிப்பிடும்படியாக வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் டி.வி.யில் பிக் பாஸ் சீசன் – 3 என்ற பெயரில் கமலுக்கு பிடித்தமான காமகளியாட்ட நிகழ்ச்சி நடத்தப் போகிறாராம்.


பூந்தமல்லயில் இதற்காக பிரமாண்ட பிக்பாஸ் வீடு செட் போடப்பட்டு வேலைகள் வேகமாக நடக்கிறதாம். கடந்தமுறை போன்றே இந்த முறையும் தமிழ் சினிமா தொழிலாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனராம். ஆந்திர சினிமா தொழிலாளர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனராம். இதனால் வேலை இல்லாம் இருக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்கள் கொதித்துப்போய் உள்ளனர். அவர்கள் கடந்தமுறை போன்று பிக்பாஸ் செட் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


எது எப்படியோ, தேர்தலின்போதுதான் கமலஹாசனுக்கு பெண்கள் ஆதவு கிடைக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் பெண்களின் பேராதரவு அவருக்கு நிச்சயம் கிடைக்கும். அப்படியே 4 மாதங்கள் ஓடிப்போய்விடும்…


Next Story