Kathir News
Begin typing your search above and press return to search.

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 May 2019 8:42 AM GMT


கோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 70 இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 30 – ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது அவரது உதவியாளர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


இந்நிலையில் கடந்த மே 3ல், கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு அருகே உள்ள ஒரு குட்டையில், பழனிசாமிபிணமாக கண்டெடுக்கப்பட்டார். பழனிச்சாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றக்கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார்.


இந்த வழக்கு விசாரணை இன்று (மே. 9) சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும்சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், '' மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து போலீசார் விரிவான அறிக்கையைமே 15 க்குள் தரவும், அதுவரை மறு உத்தரவு தரும் வரையில், பழனிசாமியின் பிரேதத்தை கோவை அரசுமருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டும்,'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், '' போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்விசாரணையின் போது பயனிசாமி மரணம் அடையவில்லை. நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தி அதுவீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் விசாரணைகோவைக்கு மாற்றப்பட்டது,'' என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், போலீசார் வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், பழனிசாமியின் உடலை மறு உத்தரவு வரும்வரையில், கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்க கோரியும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 15 க்குஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


=====


Next Story
கதிர் தொகுப்பு
Trending News