Top
undefined
Begin typing your search above and press return to search.

கூட்டணி ஆட்சி ஏற்பட்டாலும் மோடிதான் பிரதமர் : தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்!! மூத்த அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்!!

கூட்டணி ஆட்சி ஏற்பட்டாலும் மோடிதான் பிரதமர் : தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்!! மூத்த அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்!!

SG SuryahBy : SG Suryah

  |  11 May 2019 5:57 AM GMT



டில்லியில் மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:


பா.ஜ., நிச்சயம் ஆட்சியமைக்கும்; அதுவும் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தான் ஆட்சியமைக்கும். தே.ஜ., கூட்டணி, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பா.ஜ., தனித்து, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றாலும்கூட, கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, தே.ஜ., கூட்டணி ஆட்சியைத்தான், நாங்கள் அமைப்போம்.


இந்த தேர்தலில், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உ.பி.,யிலும் கூட, நாங்கள் பெருவாரியான வெற்றியை பெறுவோம். முன்னாள் பிரதமர் ராஜிவை, பிரதமர் மோடி, தவறாக விமர்சனம் செய்து விட்டதாக, பலரும் குதிக்கின்றனர்.


அதேசமயம் மோடியை, 'திருடன் திருடன்' என, ராகுல் எத்தனை முறை கூறியிருக்கிறார். அதை, யாராவது நினைத்து பார்க்கின்றனரா.


மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் வாய்ப்பில்லை ஏன்?


அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததை, யாரும் விமர்சிக்க தேவையில்லை. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களை, தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்பது, கட்சி தலைமை எடுத்த முடிவு.


பலரும் கூறுவது போல, பிரதமர் பதவிக்கான போட்டியில், நான் இல்லை. அந்த ஆசை, எனக்கு கிடையவே கிடையாது. கடைசி நேரத்தில், என் பெயர் தேர்வாகும் என, கூறப்படுவதெல்லாம் கற்பனையே.


பா.ஜ., ஆட்சி அமைக்க, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறைந்தாலோ, பிற கட்சிகளின் தயவை பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலோ, பிரதமர் பதவிக்கான நபர் மாறுவார் எனக் கூறப்படுவது, அவ்வவர்களின் யூகம் தான். இவ்வாறு கட்கரி கூறினார்.


Next Story