Kathir News
Begin typing your search above and press return to search.

கெட்டுப்போன கட்சியிலுள்ள நல்ல மனிதன் நல்லக்கண்ணு !! பித்தலாட்டக்காரர்களுடன் சேர்ந்து குடியிருந்த வீட்டு விவகாரத்தை பெரிதாக்கலாமா?

கெட்டுப்போன கட்சியிலுள்ள நல்ல மனிதன் நல்லக்கண்ணு !! பித்தலாட்டக்காரர்களுடன் சேர்ந்து குடியிருந்த வீட்டு விவகாரத்தை பெரிதாக்கலாமா?

கெட்டுப்போன கட்சியிலுள்ள நல்ல மனிதன் நல்லக்கண்ணு !! பித்தலாட்டக்காரர்களுடன் சேர்ந்து குடியிருந்த வீட்டு விவகாரத்தை பெரிதாக்கலாமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 May 2019 6:07 AM GMT


பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றாலே உலகம் முழுவதும் மக்களால் ஒதுக்கப்பட்ட கட்சியாக மாறிவிட்டது. இந்தியாவிலும் அதன் கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லாமல் போய் மக்களால் வெறுப்புடன் பார்க்கப்படும் கட்சியாக மாறிவிட்டது. அதன் விளைவு கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் அது துடைக்கப்படும் அளவுக்கு வந்துவிட்டது.


ஏழைகளுக்காக குரல் கொடுத்த கட்சி என்றுதான் சொல்லப்படுகிறதே ஒழிய உண்மையில் மற்ற கட்சிகளுக்கு குறைவில்லாமல் செல்வவளமும், பணவருவாயும் அதிகமுள்ள கட்சி.


ஒரு தொகுதியில் கூட எம் எல் ஏ இல்லாவிட்டாலும், ஒரே ஒரு கவுன்சிலர் கூட இல்லாவிட்டாலும் மாவட்டத்தலைவர்களிலிருந்து, மாவட்டத் தலைவர்கள் வரை வெளிநாட்டு வகை கார் வசதிக்கு குறைவு கிடையாது. பிரம்மாண்டமான கட்சி அலுவலகங்கள், நகரங்களில் கட்சி பெயரில் கோடானுகோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், புத்தக நிறுவனங்கள் என செல்வக்கொடி நாட்டும் கட்சியாக உள்ளது கம்யூனிஸ்டு கட்சிகள். அதிலும் வலது கம்யூனிஸ்டு கட்சி இடது கம்யூனிஸ்ட் கட்சியைவிட செல்வ வளத்தில் பலம் வாய்ந்தது.


இந்த கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஓய்வு பெறும்போது மிகப்பெரிய தொகையும், வசதியான காரும் கொடையாக கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கும் வழங்கப்பட்டது. அதில் பாதியை திரும்ப கட்சிக்கே அளித்து விட்டதாக சொல்கிறார்கள். அது அவரது தாராள மனதை பொறுத்த விஷயம்.


தற்போது பேசப்படுகின்ற விஷயம் என்னவென்றால் தியாகராயநகர் பகுதியில் உள்ள அரசு வீட்டுவசதி வீடுகளை முன்பொரு காலத்தில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு குறைந்த வீட்டு வாடகைக்கு அளித்திருந்தது. இடையில் வீட்டு வாடகையும் ஏற்றப்படவில்லை. வீடுகளும் மிகவும் பழமையாகிவிட்டது. இந்த நிலையில் அரசு மறு சீரமைப்புப் பணிகளுக்காக அனைத்து வீடுகளையும் காலி செய்ய சொல்லியுள்ளது. அதில் பெரும்பாலோர் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டு காலிசெய்யும் நிலையில், இந்த விவகாரத்தில் கக்கன் பெயரையும், நல்லக்கண்ணு பெயரையும் இழுத்து அவர்களை வீட்டை கா லி செய்ய சொல்வதா என இங்குள்ள எதிர் கட்சிகள் கோஷமிட அதற்கு அனைத்து பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் கோஷமிடுவது நியாயமான செயலா... ? கக்கனும், நல்லக் கண்ணுவும் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை.


கக்கன் நேர்மையான அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கடைசி வரை அரசு பென்ஷன் தொகை உதவியுடன் அரசாங்கத்தின் அரவணைப்பில் இருந்தார். அது மட்டுமல்லாமல் அவரது மனைவி அரசு பள்ளி தலைமை ஆசிரியையாகி ஓய்வு பெற்றவர். கக்கனின் தம்பி பிரபல வக்கீலாக இருந்தவர். செல்வந்தர். கக்கன் பெயரில் பெறப்பட்ட அரசு வீட்டில் இப்போது யார் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் பேசுவதில்லை.


அதே போல நல்லக் கண்ணு ஒன்றும் வசதி குறைவானவர் இல்லை. யாரிடமிருந்தும் எதையும் எதிர் பார்ப்பவருமில்லை. அவர் ஏற்கனவே கே.கே. நகரில் உள்ள வசதியான வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார். வலது கம்யூனிஸ்டு கட்சி நினைத்தால் இன்னும் வசதியான வீட்டை தங்கள் இடங்களில் கட்டித்தரலாம். அது மட்டுமல்லாமல் நல்லக் கண்ணு நேர்மையாளர்தான்... ஆனால் அவர் ஒன்றுமே இல்லாத பரதேசியோ அல்லது பிச்சைக்க்காரரோ கிடையாது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை நாடாளுமன்றத்தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றபோது அவர் வெளியிட்ட சொத்து விவரத்தை பார்த்து தெரிந்து கொண்டு பேசலாம்.


ஆனால் வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் திமுகவின் பிரச்சாரத்துக்காக நல்லகண்ணுவையும், கக்கன் பெயரையும் இழுத்து தமிழக அரசின் பெயருக்கு திட்டமிட்டு களங்கம் உண்டாக்குகிறார்கள் என்பதே உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் கக்கன் தன் வாழ்நாள் முழுவதும் திமுகவையும், கருணாநிதியின் போக்கையும் எதிர்த்தவர். பெரியாரின் கொள்கைகள், காந்தீயக் கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறி முழு மூச்சாக எதிர்த்தவர். இவருடைய கடைசிகாலத்தில் திமுகவால் கண்டுகொள்ளப்படாதவர். ஆனால் ஆட்டின் மீது ஓநாய் பரிதாபப்படுவதுபோல இன்று ஸ்டாலின் பரிந்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News