Top
undefined
Begin typing your search above and press return to search.

அரவக்குறிச்சியில் சர்ச்சை பேச்சு : இந்துக்கள் எழுச்சியால் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு ஓடிப்போன கமலஹாசன்!! தலையிலடித்துக் கொள்ளும் தொண்டர்கள்!!

அரவக்குறிச்சியில் சர்ச்சை பேச்சு : இந்துக்கள் எழுச்சியால் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு ஓடிப்போன கமலஹாசன்!! தலையிலடித்துக் கொள்ளும் தொண்டர்கள்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 May 2019 6:50 AM GMT


அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியின் படுகொலையை இந்து தீவிரவாதம் எனவும், கோட்சே நாட்டின் முதல் இந்து தீவிரவாதி என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில், வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கமல் இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு தலைவர்களின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கமலுக்கு பார்வை கோளாறு என்றும், கமலை போன்றவர்கள் தமிழக மக்களால் ஓரங்கட்டபட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கமல் காந்தியின் பக்தரா? அல்லது பினராயி விஜயனின் பக்தரா? எனவும் கேள்வி எழுப்பினார்.


அதேபோல மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும், எச்.ராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இணையதளங்களில் பொதுவானவர்கள் மட்டுமன்றி, இந்து வாலிபர்களும், பாஜகவினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், கமலஹாசனின் தனிப்பட்ட ஒழுங்கீன வாழ்க்கை குறித்தும் விமர்சித்து பேசினர்.


இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பேசிவிட்டு கரூரில் உள்ள ஓட்டலில் கமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கமல் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முஸ்லிம் பகுதி என்று தெரிந்தும் அந்த இடத்தில் நீங்கள் சர்ச்சையாக பேசியதால் மற்ற இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்றார்களாம்.


இந்த நிலையில் பிரச்சாரம் செய்ய இருந்த வேலாயுதம்பாளையம், தளவாபாளையம் உள்ளிட்ட 5 ஊர்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அங்குள்ள நிலவரம் குறித்து கமல் போன் செய்து பேசினாராம்.


அந்த பகுதி நிர்வாகிகள் நீங்கள் வரவேண்டாம் .. உங்கள் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிளம்பிவிடுங்கள் என்று கூறியதை அடுத்து ஓட்டலை காலி செய்து கொண்டு புறப்பட்டு விட்டார். காவல் துறையும் அதே போலவே தங்கள் கருத்தை கூறியதாம். அரசியல் தெரியாமல், இடம், பொருள், ஏவல் தெரியாமல் சர்ச்சையாக பேசி வாழும் கமலை நினைத்து அவரது ரசிகர்களும், தொண்டர்களும் தலையிலடித்துக் கொள்கிறார்களாம்.


Next Story