Top
undefined
Begin typing your search above and press return to search.

"எந்த ஒரு ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது" - கமலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்!

"எந்த ஒரு ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது" - கமலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 May 2019 6:40 AM GMT


அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.


அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரவக்குறிச்சியில் கமலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக 'நியூஸ் எக்ஸ்' டிவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது:-


எந்த ஒரு ஹிந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்த நபர் ஹிந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு தீவிரவாதியும் ஹிந்து என உரிமை கோர முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பது ஹிந்து மதத்தின் ஆழமான நம்பிக்கை. அதில், மக்களை கொல்லவோ, துன்புறுத்தவோ ஹிந்துக்களுக்கு அனுமதிக்கவில்லை.


இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


Next Story